மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? இயக்குனர் சிவா கொடுத்த முக்கிய தகவல்!

சிறுத்தை சிவா அதாவது இயக்குனர் சிவா அவர்கள் தெலுங்கில் பல திரைப்படங்கள் இயக்கியிருந்தாலும் தமிழில் அவர் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் சிறுத்தை. இந்த திரைப்படம் தெலுங்கில் மிக பிரம்மாண்ட இயக்குனர் ராஜுமௌலியின் விக்ரமார்குடு படத்தின் ரீமேக் ஆக தமிழில் சிறுத்தை எனும் டைட்டிலில் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா இந்த படத்தில் நடித்திருப்பார்கள். இந்தத் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் கிட்டை தொடர்ந்து இயக்குனர் சிவா சிறுத்தை சிவா என பெரும்பாலும் அழைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் அஜித் நடிப்பில் விஸ்வாசம், வேதாளம், விவேகம் என அடுத்தடுத்து தெறிக்க விடும் வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் நீங்காத இடத்தை பெற்றிருந்தார். அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கிய பெருமையும் சிவாவிற்கு உண்டு.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் திரைப்படத்தின் பாராட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் சிறுத்தை சிவா கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது அவர் கூறியது, சிறுத்தை படத்தை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் அந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரத்திற்கும் இடையே அதிகப்படியான வித்தியாசத்தை நடிகர் கார்த்தி வெளிப்படுத்தி படத்தை வெற்றி பெறச் செய்தார். அந்தப் படம் எவ்வளவு வெற்றி அடைந்ததோ அந்த அளவிற்கு தனக்கு சந்தோஷத்தையும், மகிழ்ச்சியும், பாராட்டையும் பெற்று தந்துள்ளது எனக் கூறினார்.

மீண்டும் இயக்குனர் நெல்சன் உடன் இணையும் தளபதி விஜய்.. ரகசிய அப்டேட் இதோ!

மேலும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கார்த்தி நடிப்பில் சிறுத்தை இரண்டாவது பாகம் வெளிவரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளார். இயக்குனர் சிறுத்தை சிவா தற்பொழுது நடிகர் சூர்யாவுடன் இணைந்து சூர்யாவின் 42வது திரைப்படமான கங்குவா திரைப்படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் வெற்றி நடிகர் சூர்யாவிற்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிற்கும் பெருமையை ஏற்படுத்தும் என பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் சிவா சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யாவின் கங்குவா திரைப்படம் ஒரு கமர்சியல் படமாக மட்டும் இல்லாமல் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் உள்ளது என்றும் சூர்யா ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு கொண்டாட்டமாக அமையும் என்றும் தெளிவுப்படுத்தி உள்ளார். அதே நேரத்தில் இயக்குனர் சிவாவிடம் அடுத்ததாக நடிகர் அஜித் வைத்து நீங்கள் படம் இயக்க உள்ளீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு இயக்குனர் சிவா எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் கையெடுத்து கும்பிட்ட வண்ணம் பேட்டியை முடித்துவிட்டு வெளியேறியுள்ளார். மீண்டும் இயக்குனர் சிவா மற்றும் அஜித் கூட்டணியில் படம் உருவாக வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகாத பட்சத்தில் நடிகர் அஜித் தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.