ஆதி சங்கரருக்கும் அட்சய திருதியைக்கும் என்ன சம்பந்தம்?!



கேரளாவின் ’காலடி’ என்ற ஊரில் ஆர்யாம்பாள்-சிவகுரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆதிசங்கரர்.  சிறுவயதிலேயே குருகுலத்தில் சேர்ந்து வேதங்களை கற்று பண்டிதர் ஆனார்.  குருகுலத்து விதிப்படி யாசகம் கேட்டு, ஊருக்குள் சென்றார். அவர் யாசிக்க சென்ற வீடு மிக ஏழ்மையானது. பவத் பிட்சாந்தேஹி’ என யாசித்து நின்றார். உள்ளிருந்த வெளிவந்த பெண், ஐயா! தங்களுக்கு கொடுக்க எங்கள் வீட்டில் ஏதுமில்லை. இந்த காய்ந்த நெல்லிக்காயை தவிர்த்து.. எனக்கூறி மனதார ஆதிசங்கரருக்கு பிட்சை இட்டாள். ஏழ்மை நிலையிலும் தன்னிடமிருந்த நெல்லிக்கனியை கொடுத்த பெண்ணின் இரக்கக்குணத்தை கண்டு நெகிழ்ந்த ஆதிசங்கரர், அவள் வறுமையை போக்க, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி  மகாலட்சுமியை மனதில் இறுத்தி தியானித்தார். அப்பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி, மழையாய் பொழிந்து அவளது வறுமை நீங்கியது. அப்படி ஏழைப்பெண்ணின் ஏழ்மை நீங்கிய நாள் அட்சயதிருதியை நாளாகும்.

அட்சய திருதியை அன்று ஆதிசங்கரரின் பிறந்த ஊரில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில், 32 நம்பூதிரிகளைக்கொண்டு, 1008முறை கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க, வெள்ளி நெல்லிக்கனிகளை வைத்து பண்ணப்படும்  கனகதாரா யாகம் செய்கின்றனர். இடுப்பில் கைவைத்தபடி ஒரு கையில் வெண்ணெயுடன் கிருஷ்ணர் காட்சியளிக்கும் கருவறைக்கு பெயர் க்ருஷ்ண அம்பலம். இச்சன்னிதியின் வலப்புறம்  சிவனும், இடப்புறம் சாரதாம்பிகைக்கும், சக்தி வினாயகருக்கும் கோவில் உண்டு. 

இதுவே ஆதிசங்கரருக்கும், அட்சய திருதியை நாளுக்குமான சம்பந்தமாகும்.

Published by
Staff

Recent Posts