கவுண்டமணிக்கு வணக்கம் சொல்லாத விசித்ரா : என்ன நடந்தது தெரியுமா?

சில்க் ஸ்மிதாவிற்கு அடுத்த படியாக கவர்ச்சி வேடங்களிலும், வில்லி வேடங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதைக் கிறங்கடித்தவர் நடிகை விசித்ரா. வில்லாதி வில்லன் படத்தில் அம்சவள்ளியாக நடித்து பெயர் பெற்றவர், அதன்பின் வந்த முத்து திரைப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

பல தொலைக்காட்சித் தொடர்களில் இன்னமும் நடித்து இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் விசித்ரா தற்போது பிக்பாஸ் சீசன் 7நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடி வருகிறார். நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவிற்கு எதிராக இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு உண்டானது.

தற்போது விசித்ரா காமெடி ஜாம்பவான் கவுண்டமணி குறித்து ஒரு பேட்டியில் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் “இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் பெரிய குடும்பம் பட ஷுட்டிங்கின் போது உனக்கும் கவுண்டமணிக்கும் என்ன பிரச்சினை என்று கேட்டார்.

பிரதீப் ரங்கநாதனுடன், விக்னேஷ் சிவன் இணையும் படத்தில் நயன்தாரா இருக்கிறாரா?

நான் ஏதுமில்லை என்று சொல்ல சரி அவருக்கு வணக்கம் சொல்லி விட்டு வா என்றார். நானும் கவுண்டமணியைச் சந்தித்து வணக்கம் சொன்னேன். இதற்கு முன் ஏதோ ஒரு தருணங்களில் கவுண்டமணிக்கு வணக்கம் சொல்லாததால் அவர் என் மீது கோபமாக இருந்ததாகவும், அவருடன் சேர்ந்து நடிக்க முடியாது எனவும் கவுண்டமணி கூறினாராம். அதனால் தான் மீண்டும் என்னை வணக்கம் சொல்லச் சொன்னதாகவும் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்“ என்று அந்தப் பேட்டியில் விசித்ரா கூறியுள்ளார்.

மேலும் ஷுட்டிங் ஸ்பாட்டில் ஷுட்டிங் முடிந்தவுடன் தேவையில்லாமல் அரட்டையடிப்பதோ மற்றவர்கள் நடிப்பதைக் காணும் பழக்கமோ எனக்குக் கிடையாது என்றும் உடனே கிளம்பி விடுவேன் என்றும் அந்தப் பேட்டியில் விசித்ரா கூறினார்.

நடிகை விசித்ராவும் கவுண்டமணியும்  பல படங்களில் இணைந்து காமெடிக் காட்சிகளில் நடித்துள்ளனர். இவர்களது காம்போ ரசிகர்கள் வயிற்றைப் பதம் பார்க்கும். மேலும் பத்தாவதுவரை மட்டுமே படித்த  விசித்ரா திரையுலகத்திற்குள் நுழைந்ததால் அதன்பிறகு அஞ்சல் வழிக்கல்வியிலேயே படித்து உளவியல் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை வில்லியம்ஸ் பிரபல நடிகர் என்பதும்  2011-ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார் என்பதும் பலர் அறியாத தகவல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews