பிரதீப் ரங்கநாதனுடன், விக்னேஷ் சிவன் இணையும் படத்தில் நயன்தாரா இருக்கிறாரா?

‘லவ் டூடே’ படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் புகழின் உச்சியை அடைந்துவிட்டார். 2022ல் வெளியான படங்களில், எல்லாரையும் ஆச்சர்யப்பட வைத்த படம் லவ் டூடே.

படத்தை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதீப்பை  அழைத்து படம் குறித்து பேசி பாராட்டினார். இயக்குனரான பிரதீப் ரங்கநாதன், 2019ல் ஜெயம் ரவியை வைத்து ‘கோமாளி’ என்ற படத்தை இயக்கினார்.

அந்தப்படம் 90ஸ் கிட்களை கவரும் வகையில் அமைந்தது. சூப்பர் ஹிட் வெற்றியையும் கொடுத்தது. அதன் பிறகு பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தும்,  அதை தவிர்த்து வந்தார் பிரதீப்.

ஏற்கனவே அவர் எடுத்து வைத்திருந்த ‘App Lock’என்ற குறும்படத்தை படமாக்க வேண்டுமென்ற எண்ணம் பிரதீப் ரங்கநாதனுக்கு தோன்றியது. அதற்கான முயற்சியில் இறங்கினார்.

அவரே ஹீரோவாக நடிக்க போவதை சொல்லியே தயாரிப்பாளர்களிடம் அணுகி இருக்கிறார். ஒரு சிலர் மறுத்த போதும், AGS நிறுவனத்திற்கு பிரதீப் ரங்கநாதனின் கதை மீதும், அவர் மீதும் அலாதியான நம்பிக்கை இருந்தது.

இதனால், பிரதீப்பே படத்தை இயக்கியும் நடிக்க சம்மதம் தெரிவித்தனர். குறைவான பட்ஜெட்டில் யாரும் எதிர்பார்க்காத வசூலை லவ் டூடே கொடுத்தது.

AGS நிறுவனத்தின் நம்பிக்கையும் வீண் போகவில்லை. படத்தின் வசூலை பல நாட்களாக கொண்டாடினர். அதன் பின் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய அடுத்த படங்கள் குறித்த எந்த அப்டேட் கொடுக்காமல் இருந்து வந்தார்.

லவ் டூடே வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுதான் பிரதீப்பின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவரத்தொடங்கி இருக்கிறது.

பிரதீப் உடன் விக்னேஷ் சிவன் இணைந்து படம் பண்ண போகிறார். அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு கை நழுவி போன நிலையில்,  பிரதீப்பை இயக்க போகிறார் விக்னேஷ் சிவன்.

pradeep and wikki with anurag

அவருடன் எஸ்.ஜெ சூர்யா நடிக்க போவதாக கூறப்படுகிறது. நயன்தாராவும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரம்பத்தில் இந்தப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ்  தயாரிப்பதாக இருந்தது. தற்போது, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார். விரைவிலேயே இது குறித்து அறிவிப்புகள் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.