21 வருஷம் ஆகிடுச்சு!.. இன்னமும் டாப் ஹீரோயினாக வலம் வரும் திரிஷா.. வெளியான செம வீடியோ!

பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக அடையாளம் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை திரிஷா. அதன் பின்னர், இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா, நந்தா மற்றும் லைலா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மும்பையில் இருந்து வந்த நடிகைகள், கேரளாவில் இருந்து வந்த நடிகைகள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வந்த நிலையில் சென்னை பொண்ணான திரிஷா 21 ஆண்டுகள் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவது மிகப்பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.

21 ஆண்டுகளாக கலக்கும் சென்னை பொண்ணு:

இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் சமீபத்தில் மிகப்பெரிய பிரச்சனையை கிளப்பியுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமீர் இயக்குனராக அறிமுகமான மௌனம் பேசியதே படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தில் தான் நடிகை திரிஷா கடைசிவரை சூர்யாவை காதலிப்பது போல காட்டப்பட்டு கிளைமாக்ஸில் இன்னொருவரை திருமணம் செய்துகொண்டு செல்லும் காட்சி அப்போது ரசிகர்களை மிகவும் கவர்ந்து இழுத்தது.

அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதனை முன்னிட்டு இன்று காலை இயக்குனர் அமீர் ஒரு நன்றி அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், தனது முதல் படமான மௌனம் பேசியதே வெற்றி படமாக மாற உதவ அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியிருந்தார்.

ரசிகர்களுக்கு நன்றி:

இந்நிலையில் தற்போது, நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு, இத்தனை ஆண்டுகளாக தனக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்து இந்த உச்சத்தில் கொண்டு வந்து வைத்திருக்கும் அன்பு ரசிகர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி வெதர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தில் குந்த வகையாக நடித்த திரிஷாவுக்கு இந்த ஆண்டு விஜயின் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், அடுத்து மகிழ்ச்சி திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் திரிஷா தான் ஹீரோயின் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ் சினிமாவை தாண்டி மலையாளத்திலும் சமீப காலமாக திரிஷாவின் கை ஓங்கி இருக்கிறது. மோகன்லாலின் ராம் மற்றும் டொவினோ தாமசின் ஐடென்டிட்டி உள்ளிட்ட படங்களிலும் திரிஷா நடித்த வருகிறார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.