ரஜினி, கமலுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்த நடிகை: சுமித்ராவின் சொல்லப்படாத பயணம்..!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்த நடிகை சுமித்ராவின் சொல்லப்படாத தகவல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை சுமித்ரா. சிவாஜி கணேசன், சிவகுமார் போன்ற சீனியர் நடிகர்கள் மற்றும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற மாஸ் நடிகர்களுடன் நடித்தவர். ரஜினியுடன் புவனா ஒரு கேள்விக்குறி என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்த அவர் ’பணக்காரன்’ என்ற திரைப்படத்தில் அம்மாவாக நடித்தார். அதேபோல் கமல்ஹாசன் உடன் ’நிழல் நிஜமாகிறது’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் ’சிங்காரவேலன்’ என்ற படத்தில் அம்மாவாக நடித்தார்.

சொந்த விமானம்.. ராயல் என்ஃபீல்டு பைக்.. மாளிகையில் வாழ்க்கை. புன்னகை அரசி கே.ஆர். விஜயாவின் அறியாத தகவல்..!

sumithra

நடிகை சுமித்ராவின் சொந்த ஊர் கேரளா. ஆனால் அவருடைய தந்தையின் பணி மாற்றம் காரணமாக அவரது குடும்பத்தினர் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தனர். ஆந்திராவில் பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருந்த சுமித்ராவுக்கு நடனத்தில் ஆர்வம் என்பதால் சிறு வயதிலேயே அவர் நடனத்தை முறையாக கற்றுக் கொண்டார்.

இந்த நிலையில்தான் தனது 18வது வயதில் அம்மாவின் அப்பாவான தாத்தாவை பார்ப்பதற்காக சென்னை வந்தார். அப்போதுதான் அவர் முருகப்பன் மாஸ்டர் என்பவரது கண்ணில் பட்டதால் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

சுமித்ராவின் முதல் படம் மலையாளத்தில் வெளியானது. அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து பிரேம் நசீர் உள்பட பல பிரபலங்களுடன் அவர் மலையாளத்தில் நடித்தார்.

sumithra 4

இந்த நிலையில் தான் பண்டரி பாய் தயாரிப்பில் துரை இயக்கத்தில் முத்துராமன் நடித்த ’அவளும் பெண்தானே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அவர் அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக அவர் ’மோகம் 30 வருஷம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 6 நடிகைகள் அவரை விட வயது அதிகமா? யார் யார் தெரியுமா?

அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது புவனா ஒரு கேள்விக்குறி என்ற படம் தான். அந்த படத்தில் அவர் சிவகுமாரால் ஏமாற்றப்பட்டு அதன் பின் ரஜினிக்கு ஜோடியாகி ஒரு கட்டத்தில் ரஜினியையும் அவர் இழந்து இருப்பார். அப்படி ஒரு கேரக்டரில் அவர் சிறப்பாக நடித்திருந்தார்.

இதனை அடுத்து சிவாஜி கணேசனுக்கு தங்கையாக ’அண்ணன் ஒரு கோயில்’ என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்று தந்தது.

sumithra 3

கமல்ஹாசன் நடிப்பில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் மொத்தம் நான்கு முக்கிய கேரக்டர்கள்தான். அதில் ஒன்றில் சுமித்ரா நடித்திருந்தார். அதன் பிறகு ’வட்டத்துக்குள் சதுரம்’, ’சொன்னது நீதானா’, ’ஜஸ்டிஸ் கோபிநாத்’, ’ருத்ரதாண்டவம்’, ’எங்கம்மா மகாராணி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு கதாநாயகி வாய்ப்புகள் குறைய தொடங்கியபோது அம்மா, அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் அவர் தயங்காமல் நடித்தார்.

குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தில் பிரபுவுக்கு அம்மாவாக நடித்தார். அதே போல் ரஜினிக்கு அம்மாவாக ’பணக்காரன்’ படத்திலும், கமல்ஹாசனுக்கு அம்மாவாக ’சிங்காரவேலன்’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் அவர் அம்மாவாக நடித்திருக்கிறார். தற்போதும் அவர் ஒரு சில படங்களில் அம்மாவாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தில் கூட அவர் அஜித்துக்கு அம்மாவாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

sumithra 1

3 கேரக்டர்கள் மட்டுமே.. 175 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.. 10 மடங்கு லாபம்.. காவிய திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்..!

இந்த நிலையில் நடிகை சுமித்ரா கடந்த 1980 ஆம் ஆண்டு கன்னட இயக்குனர் ராஜேந்திர பாபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உமாசங்கரி மற்றும் நக்ஷத்திரா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews