மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆர்-ஐ தேற்றிய சௌகார் ஜானகி பாடல்.. நெகிழ்ந்து போன மக்கள் திலகம்

சினிமா உலகில் வாய்ப்புக் கிடைப்பது என்பதே அபூர்வம் தான். ஹீரோயின் வாய்ப்புக்காக எண்ணற்ற நடிகைகள் காத்துக் கிடக்க ஒரு குழந்தைக்குத் தாயான பின்பும் தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துப் புகழ்பெற்றவர்தான் சௌகார் ஜானகி. ஹீரோயின்களுக்கு திருமணம் முடிந்து விட்டால் அவர்கள் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்ற இலக்கணத்தை அன்றே உடைத்தெறிந்து அவர் சினிமாவில் கோலோச்சி வெற்றி அடைந்தார்.

வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த சௌகார் ஜானகி திருமணம் முடிந்து கையில் மூன்று மாதக் குழந்தையுடன் இருந்த போது குடும்பத்தில் வறுமை நிலவியது. தனது கணவரிடம் சினிமா ஆசை பற்றித் தெரிவிக்க அவரும் சம்மதம் கொடுக்க தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் வாய்ப்புக் கேட்டுள்ளார். அப்படி அவர் என்.டி.ராமராவ்-க்கு ஹீரோயினாக 1950-ல் சவுகார் படத்தில் நடித்தார். இந்தப் படமே அவருக்குத் திருப்புமுனையாக வர பின் இந்தப் படத்தின் பெயரே அவரது பெயருக்கு முன் ஒட்டிக் கொண்டது.

ஆள் அட்ரஸ்ஸே இல்லாமல் இருந்த 80‘s காமெடி நடிகை.. விஷால் செய்த பேருதவி

அதன்பின் சரியாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவருக்கு புதிய பறவை கம்பேக் கொடுத்தது. கிளாமர் ரோலில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்குப் பின் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட ஆரம்பித்தார். மேலும் பாமா விஜயம், எதிர்நீச்சல், தில்லு முல்லு போன்ற நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் இருந்த சமயம் அது. அப்போது எம்.ஜி.ஆரின் ஒளிவிளக்கு படத்தில் தானே சென்று வாய்ப்புக் கேட்டு நடித்தார் சௌகார் ஜானகி. பின் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவருக்காக ரசிகர்கள், தொண்டர்கள் அவர் பூரண நலம் பெற்றுத் திரும்ப பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். அச்சமயத்தில் ஒளி விளக்கு படத்தில் சௌகார் ஜானகி நடித்த ‘இறைவா உன் மாளிகையில்..‘ என்ற பாடலானது எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களின் பிரார்த்தனைக் குரலாய் ஒலித்தது.

பின்னர் பூரண குணமடைந்து நாடு திரும்பிய எம்.ஜி.ஆர்., சௌகார் ஜானகியிடம் உன்னுடைய பாடல்தான் பட்டிதொட்டியெங்கும் நான் மருத்துவமனையில் இருந்ததாமே என்று கேள்விப்பட்டு நெகிழ்ந்து அவரை வாழ்த்தினார். அந்தப் பாடலை வாலி இயற்ற எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.