ஆள் அட்ரஸ்ஸே இல்லாமல் இருந்த 80‘s காமெடி நடிகை.. விஷால் செய்த பேருதவி

சினிமாவில் காமெடி நடிகர்கள் எத்தனையோ பேர் உருவாகி இருந்தாலும், ஆச்சி மனோரமாவிற்குப் பிறகு காமெடிகளில் கலக்கியவர் கோவை சரளா. இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட காலகட்டங்களில் 80-களில் காமெடி நடிகையாகவும், நடனக் கலைஞராகவும் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை பிந்துகோஷ். உலக நாயகன் கமலஹாசன் அறிமுகமான களத்தூர்கண்ணம்மா தான் இவருக்கும் முதல்படம். இதில் இவர் சிறுவயது கமலுடன் ஒரு பாடலுக்கு குழு நடனம் ஆடியிருப்பார்.

அதன்பின் பல வருட இடைவெளிக்குப் பிறகு பிரபு, சுரேஷ், விஜி, சில்க் ஸ்மிதா நடித்த கோழி கூவுது படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இவரது ஸ்டைலும், தோற்றமும் காமெடிக் காட்சிகளுக்கு ஒர்க் அவுட் ஆகியதால் இயக்குநர்கள் இவரை அதிகமாக காமெடிக் காட்சிகளில் நடிக்க வைத்தனர். மேலும் பல பாடல்களுக்கும் நடன இயக்குநராகவும் பணியாற்றி வந்தார்.

தொடர்ந்து சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், பிரபு, விஜயகாந்த், உள்ளிட்டவர்களின் படங்களில் பிந்துகோஷ் நடித்தார். இவரது காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக உருவங்கள் மாறலாம், தூங்காதே தம்பி தூங்காதே, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, ஓசை, கொம்பேறிமூக்கன், நீதியின் நிழல், நவக்கிரக நாயகி உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

பலருக்கும் தெரியாத மீசை முருகேசனின் மறுபக்கம்.. சவுண்ட் இன்ஜினியருக்கே சவால் விடும் அலாதி திறமை

விஜயகாந்த் நடித்த வெள்ளை புறா ஒன்று என்ற திரைப்படத்தில் பிந்துகோஷ், லூஸ் மோகனுடன் இணைந்து நடித்திருப்பார். லூசு மோகன் மிகவும் ஒல்லியான உடல்வாகுவாகவும் பிந்துகோஸ் குண்டான உடல்வாகு கொண்டவராக இருக்கும் நிலையில் இந்த ஜோடியை பார்த்து பலர் ஆச்சரியமடைந்தனர்.

இந்நிலையில் நடிகை பிந்துகோஷ் திரையுலகில் உச்சத்தில் இருந்த போது சென்னையில் பங்களா போன்ற வீட்டை வாங்கினார். வீட்டு வேலை, சமையல் வேலை என தனித்தனியாக நான்கு வேலையாட்கள் அவரிடம் வேலை பார்க்கும் அளவிற்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார்.

அதன்பிறகு வாழ்க்கை இவரை புரட்டிப் போட்டது. தைராய்டு உள்பட பல நோய்கள் அவருக்கு இருந்ததால் அவரது சினிமா வாய்ப்பு குறைந்து போனது. ஒரு கட்டத்தில் சம்பாதித்த சொத்து எல்லாம் சிகிச்சைக்காகவே செலவழித்தார். ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கே பணம் இல்லாமல் வீடு கார் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஒரு சிறிய வாடகை வீட்டில் இருந்தார்.

இவரின் நிலையைக் கேள்விப்பட்ட நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அவருக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருகிறார். அது மட்டும் இன்றி அவரது நடிகர் சங்க உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் ஆயுள் காலத்திற்கு புதுப்பிக்க விஷால் உதவினார்.

தற்போது நலமுடன் இருக்கும் பிந்துகோஷ் மீண்டும் சினிமா வாய்ப்புகள் வந்தால் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.