ஒரே வார்த்தையில் பிரசன்னாவை கிளீன் போல்ட் ஆக்கிய சிநேகா.. இப்படி ஒரு லவ்-ஆ…!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் பலர் இருந்தாலும் இவற்றில் சினேகா-பிரசன்னா ஜோடி எப்பவுமே தனி ரகம் தான். மகாராஷ்டிராவை தாயகமாகக் கொண்ட சிநேகா தமிழில் பிரசாந்துடன் ஜோடியாக நடித்த விரும்புகிறேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து வந்த ஆனந்தம் படம் இவருக்கு நல்ல புகழைக் கொடுத்தது. இப்படத்தில் இடம்பெற்ற பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் இளைஞர்களின் காதல் கானமாகவும், பெண்களின் மனம் கவர்ந்த பாடலாகவும் அன்றைய காலகட்டத்தில் விளங்கியது.

இதனையடுத்து கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து தெலுங்கு, கன்னட, மலையாளப் படங்கள் இவருக்கு குவிய பான் இந்தியா சினிமா உலகில் புன்னகை அரசியாகத் திகழ்ந்தார். கே.ஆர். விஜயாவிற்குப் பின் இவருக்கு ரசிகர்கள் புன்னகை அரசி என்ற பட்டத்தை சினேகாவிற்கு அளித்தனர்.

விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்த சினேகா தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் விஜய் நடிக்கும் GOAT படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இவர் இணைந்து நடித்தார். இப்பட ஷுட்டிங்கில் இவர்கள் இருவரும் காதல்வயப்பட்டனர்.

நடிச்சது கொஞ்ச படம்.. ஆனா எல்லாமே நின்னு பேசுற கதாபாத்திரங்கள்.. மறைந்த நடிகர் சலீமின் அழிக்க முடியாத வில்லனிசம்

3 வருட காதலுக்குப் பின் 20123-ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் Dance Jodi Dance ரியாலிட்டி ஷோவில் இருவரும் பங்கேற்றனர். அப்போது பிரசன்னா அவரிடம் எப்படி என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்? என் குணம் இதுவெனத் தெரிந்தும் எதனால் என்னைப் பிடித்திருக்கிறது என்று கேட்க, அதற்கு சினேகா ஒரே வரியில், “ ரொம்ப சிம்பிள். நான் உங்களை எப்போதும் லவ் பண்றேன்“ என்று சொல்ல பிரசன்னாவிற்கு மறுபேச்சே வரவில்லை.

தனது காதல் மனைவியை ஒரு கனம் பார்த்தவாறே வெட்கத்தால் புன்னகைத்தார். சினேகா தனது ஒற்றை பதிலால் பிரசன்னாவை கிளீன் போல்ட் ஆக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.