“செல்வாவுக்கு விஜயகாந்த் சார் கடவுள் மாதிரி…“ அஞ்சலி செலுத்திய பின் ரோஜா புகழாரம்

மறைந்த கேப்டன் விஜயகாந்த்துக்கு தினசரி பல்வேறு அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவருடைய நினைவிடத்திலும், முக்கிய பிரமுகர்கள் நேரிடையாக சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலும் சென்று மனைவி பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் சூர்யா, ஜெயம் ரவி ஆகியோர் அவரின் நினைவிடத்தில் சென்று கண்கலங்கி அஞ்சலி தெரிவித்தது சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் முன்னாள் நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும், நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா நேற்று கேப்டன் விஜயகாந்த் இல்லத்தில் சென்று  மரியாதை செலுத்திவிட்டு மனைவி பிரேமலதாவிற்கு ஆறுதல் கூறினார். அப்போது ரோஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “கேப்டன் விஜயகாந்த் சாருடன் இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை எப்போதும் கலாய்த்துக் கொண்டிருப்பார். அவரு ஒரு குழந்தை மாதிரி.. சொல்லப் போனால் வளர்ந்த குழந்தை என்று கூட சொல்லலாம்.

இந்தி திணிப்பு கேள்விக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி : அதிர்ந்து போன நிருபர்

நான் 1991-ல் சினிமாத் துறையில் நுழையும் போது கேப்டன் வீட்டைத் தாண்டி செல்கையில் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். தன்னைத் தேடி வருபவர்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்தவர். கல்விக்கும், மருத்துவத்திற்கும் யார் இல்லை என்று வந்தாலும் அள்ளிக் கொடுப்பார். நிறைய பேரிடம் பணம் இருக்கலாம். அதைக் கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும். அதை அவரிடம் நான் கற்றுக் கொண்டேன். எனது தொகுதி கர்ப்பிணி பெண்களுக்கும் மருத்துவமனைக்கு வரும் போது சாப்பாடு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

எனது கணவர் செல்வாவிற்கு வாழ்க்கை கொடுத்தது அவர்தான். கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த புதிதில் அவருக்கு இயக்குநர் வாய்ப்புக் கொடுத்து அவரை சினிமாவில் வழிகாட்டி வாழ வைத்தவர். எனவே செல்வாவிற்கு விஜயகாந்த் சார் கடவுள் மாதிரி.“ என்று கூறினார்.

ரோஜா விஜயகாந்த்துடன் தமிழ்ச் செல்வன், வீரம் வௌஞ்ச மண்ணு போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இயக்குநர் ஆர். கே. செல்வமணி தனது முதல் படமான புலன் விசாரணை படத்தை விஜயாந்த்தை வைத்து இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற மீண்டும் இவர்கள் கூட்டணி 1991-ல் கேப்டன் பிரபாகரன் படத்தில் இணைந்தது. இப்படம் மூலமாகத்தான் விஜயகாந்த் மக்களால் கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்பட்டார். மேலும் இவருக்கு 100-வது படமாகவும் விளங்கி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.