நடிகை சிம்ரனுக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவ்வளவு ஆசையா… கை நழுவி போன கதை…

90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இவர் பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசுபவர். நடிகை மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடன கலைஞரும் ஆவார். பரதநாட்டியம் மற்றும் சாலசா நடனத்தையும் பயின்று தேர்ந்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் 2000 ஆம் ஆண்டு அதிக சம்பளம் (75 லட்சத்திற்கு மேல்) வாங்கும் நடிகையாக இருந்தார். தமிழில் நடித்ததற்காக மட்டுமே 10 விருதுகளை வென்றுள்ளார். அதில் 4 பிலிம்பேர் விருதுகள், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

தனது வசீகர தோற்றத்தால் தமிழ் ரசிகர்களை கட்டி போட்டிருந்தார். தமிழ் திரையுலகில் இருக்கும் எவெர்க்ரீன் நாயகிகளில் இவரும் இடம்பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் கனவு கன்னி என்று கூறப்பட்டார். தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பிரேக் எடுத்த நடிகை சிம்ரன் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்.

இந்த நிலையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சிம்ரன் இறுதியாக நடிகர் விக்ரமின் ‘ மஹான்’ படத்திலும் நடிகர் ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்திலும் நடித்திருந்தார். மேலும் அவர் நடித்திருந்த ‘அந்தகன்’ மற்றும் ‘துருவ நட்சத்திரங்கள்’ ஆகிய இரு படங்கள் இன்னும் ரிலீசாகவில்லை.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை சிம்ரன். அவரிடம் நீங்கள் நடிக்க விரும்பிய கதாபாத்திரம் என்ன என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நடிகை சிம்ரன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்த ‘நந்தினி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் விரும்பினேன் என்று பதில் அளித்துள்ளார். வரலாற்று திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டு பிரமாண்ட வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தில் வரும் ‘நந்தினி’ கதாபாத்திரத்தை நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews