ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம்.. வில்லியாக சிம்ரன் செஞ்ச தரமான சம்பவம்

ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டவர் சிம்ரன். இவரது நடனத்துக்கு இன்று வரை எந்த ஹீரோயினாலும் ஈடுகொடுக்க முடியவில்லை. பாடல்களில் தன்னுடைய இடுப்பை வளைத்து நெளித்து ஆடுவதால் ரசிகர்களிடம் இடுப்பழகி என்ற பட்டமும் பெற்றார்.

அபாரமான நடிப்பாற்றல் கொண்ட இவர் கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், பிரசாந்த், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர். பேட்ட படத்தில் ரஜினியுடன் சில காட்சிகளில் வந்து அவருடன் நடிக்காத குறையையும் நிவர்த்தி செய்து கொண்டார்.

தான் நடித்த காலத்தில் மிகவும் பிஸியாக இருந்த நடிகையாகத்தான் சிம்ரன் இருந்தார். கால்ஷீட் கூட கிடைக்காமல் பல முக்கிய ஹிட் படங்களை தவறவும் விட்டிருக்கிறார். இருந்தாலும் நடிகைகளிலேயே மிகவும் பலமான ரசிகர்களை கொண்ட நடிகையாக சிம்ரன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அஜீத்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அசல், அட்டகாசம் என ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் சரண் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிம்ரனை பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறினார். பார்த்தேன் ரசித்தேன் படம் பிரசாந்த் நடிப்பில் லைலா மற்றும் சிம்ரன் ஜோடியாக நடிக்க மிகவும் வெற்றிப்பட்ட படமாக வந்தது. வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார் சிம்ரன்.

பாதியிலேயே விலகிய முதல் படம்.. அடுத்த படத்தில் ரவுண்டு கட்டி ஹிட் கொடுத்த சுந்தர் சி.

அந்தக் கதாபாத்திரத்திற்கு சிம்ரன் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த சரண் சிம்ரன் கால்ஷீட் கிடைக்காமல் சரண் அலைந்தாராம். ஒரு சிங்கிள் டே கூட இல்லாமல் மிகவும் பிஸியாக நடித்து வந்த சிம்ரனிடம் கதையையாவது கேளுங்கள் என சரண் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை கேட்டதும் சிம்ரன் இதை நான் கண்டிப்பாக பண்ணுகிறேன் என சொல்லி தன் மேனேஜரிடம் மற்ற படங்களின் கால்ஷீட்டை கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

பாட மறுத்த சீர்காழி கோவிந்தராஜன்… வரிகள் கிடைக்காமல் திண்டாடிய கண்ணதாசன்… இந்தப் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு சீக்ரெட்-ஆ?

இந்தப் படத்திற்காக மொத்தம் 18 நாள்கள் கால்ஷீட் கேட்ட சரணிடம் ஒரு நாள், 3 மணி நேரம், 2 மணி நேரம் என ஒதுக்கியே சிம்ரன் இந்தப் படத்தில் நடித்தாராம். அந்தளவுக்கு பார்த்தேன் ரசித்தேன் படத்தின் கதை சிம்ரனை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அவர் எதிர்பார்த்ததை போலவே அவரின் கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரசாந்த் – லைலா ஜோடியும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.