தளபதி ஷூட்டிங்கில் கதறி அழுத ஷோபனா.. ஆனாலும் மணிரத்னம் இப்படி செஞ்சிருக்கக் கூடாது..!

கமலுக்கு எப்படி ஓர் நாயகனோ அதேபோல் ரஜினிக்கு தளபதி என்னும் பெயர் சொல்லும் படத்தினைக் கொடுத்து அவரின் கேரியரை இன்னும் ஒருபடி மேலே உயர்த்திய பெருமை இயக்குநர் மணிரத்னத்திற்கு உண்டு. மகாபராதத்தில் கர்ணன் கதாபாத்திரத்தைத் தழுவி எடுக்கப்பட்ட கதையான தளபதியில் ரஜினி-மம்முட்டி என்னும் இரு சூப்பர் ஸ்டார்களும் இணைந்து அசத்தினர். நட்புன்னா என்னான்னு தெரியுமா.. சூர்யாடா.. என் இரத்தம் டா.. நண்பேன்டா.. என்று நட்புக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த படம்.

இவர்களுடன் ஒரு அர்விந்த்சாமி, ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, ஷோபனா, கீதா, பானுப்பிரியா என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் எவர்கீரீன் ஹிட் வரிசையில் சேர்ந்தன. இப்படத்தில் ஷோபனாவிற்கு ராக்கம்மா கையத் தட்டு, சுந்தரி கண்ணால் ஒரு சேதி போன்ற பாடல்கள் பெரிய வரவேற்பினைக் கொடுத்தது. ரஜினியுடனான காதல் காட்சிகளில் தூள் கிளப்பியிருப்பார் ஷோபானா.

இவ்வாறு பல வகைகளில் ஷோபனாவிற்கு பெயர் வாங்கிக் கொடுத்த தளபதி ஷுட்டிங்கில் அவர் அழுத சம்பவமும் அரங்கேறியுள்ளதாம்.

வாத்துக்கறி கேட்ட சிவாஜி… நடிகர் திலகத்தின் ரியல் முகத்தைச் சொல்லும் மோகன்லால்…

ஏனெனில், மலையாள படத்தில் பிஸியாக அவர் நடித்து கொண்டு இருந்த சமயம். இரண்டு மலையாள பட ஷூட்டிங்கை முடித்து விட்டு நேராக தளபதி படத்துக்கு வந்து இருக்கிறார். பெரிய ஸ்டார்கள் மத்தியில் ஷோபனா நடித்துக் கொண்டிருந்தாலும் வீட்டுக்கு போய் இரண்டு மாதம் ஆகிவிட்டதால் அவருக்கு ஒரு ஏக்கம் இருந்ததாம். அப்போது 20 வயதே ஆனதால் குடும்பத்தை ரொம்பவே மிஸ் செய்து இருக்கிறார்.

சரி கால்ஷூட்டை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லலாம் என தன்னை ஷோபனா தேத்திக்கொண்டு நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் கொடுத்த கால்ஷூட்டே முடிந்து விட்டதாம். இருந்தும் ஷோபனாவின் காட்சிகள் மொத்தமாக முடியவில்லை. ஒவ்வொரு நாளும் நாளையுடன் முடிந்துவிடும் என்றே சொல்லப்படுமாம்.

ஒரு கட்டத்தில் நாளை வீட்டுக்கு போக வேண்டும் என ஷோபனா ரயில் டிக்கெட் எல்லாம் போட்டு விட்டார். ஆனால் அப்போதும் கடைசி காட்சி எடுக்கப்படாமலே இருந்ததாம். அந்த நேரம் ஷோபனாவை அழைத்திருக்கிறார் மணிரத்னம். இன்று அதே பல்லவி தான் என ஷோபனா நினைத்து இருக்கிறார்.

சரியாக அவர் நினைத்தது போல மணிரத்னம் சொல்ல அவர் அங்கே கதறி அழுதே விட்டாராம். ஷூட்டிங் முடிந்து கிட்டத்தட்ட பேக்கப் டைம் என்பதால் பெரிய அளவில் அங்கு யாரும் இல்லையாம். அருகில் இருந்த மம்முட்டி மட்டும் பதறிப் போய் என்னவென்று கேட்க ஊருக்கு போகணும் விஷயத்தை சொன்னாராம். அவரோ சப்பென்று இதுக்கா அழுகை என ஷோபனாவைக் கலாய்த்து விட்டாராம்.

இப்படத்தில் நடித்த அர்விந்த்சாமி ஷோபனாவின் ஸ்கூல் ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...