எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை ஷாலினி கேட்டகேள்வி.. பலமாகச் சிரித்த மக்கள் திலகம்!

கேரளாவில் பிறந்த நடிகை ஷாலினி 25-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின் தமிழில் பந்தம், சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா, விடுதலை, பிள்ளை நிலா போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் புகழ் பெற்றவர். துறு துறு நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ஷாலினி கதாநாயகியாக மலையாளத்தில் அறிமுகமானார். பின் தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்தார்.

இப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றியடைய தொடர்ந்து விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றி பெற்றது. தொடர்ந்து மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் நடித்து மூலை முடுக்கெல்லாம் பிரபலம் ஆனார். அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகர் அஜீத்துடன் காதல் வயப்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை திருமணம் ஒன்றில் பங்கெடுத்திருக்கிறார். அந்நிகழ்வில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எம்.ஜி.ஆரை அருகில் செல்லவே பயந்த வேளையில் ஷாலினி கூலாக எம்.ஜி.ஆர் அருகே சென்றார்.

என்னது இந்தப் பாடகர் அரச பரம்பரையைச் சேர்ந்தவரா? துளியும் பந்தா இல்லாமல் எவர்கிரீன் ஹிட்ஸ் கொடுத்த ஜெயச்சந்திரன்!

தன் கையில் இருந்த சந்தன மாலையை எம்.ஜி.ஆருக்கு அணிவிக்க அவரோ, “ஷாலினியை அள்ளி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார். பின் அவரிடம் ‘உங்க பேர் என்ன?’ என்று கேட்க அவரோ சிரித்துக் கொண்டே “எம்.ஜி.ஆர்”என்று கூற, “அதுதான் தெரியுமே. அப்படின்னா என்ன அர்த்தம்?” என்று மறுபடியும் கேட்டாராம். எம்.ஜி.ஆர் பலமாகச் சிரித்து எம்.ஜி.ராமச்சந்திரன்னு அழுத்தமாச் சொன்னார். “அப்ப ஏன் எல்லோரும் உங்களை “எம்.ஜி.ஆர்”னு சொல்றாங்கன்னு திரும்பவும் கேட்க, மறுபடியும் பலமாகச் சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

இப்படி எம்.ஜி.ஆரையே பலமாகச் சிரிக்க வைத்த ஷாலினி அதன்பிறகு அவரைச் சந்திக்கவே இல்லையாம். மேலும் அவருடன் இருந்த போது அணிந்திருந்த பிங்க் நிற கவுனை இன்னமும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம் ஷாலினி. எம்.ஜி.ஆர் மறைவின் போது இறுதி ஊர்வலத்தின் போது திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்த போதுதான் அவரது புகழின் முழுப் பரிமாணமும் ஷாலினிக்கப் புரிந்ததாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews