நடிகை சாவித்திரி தயாரித்த இரண்டு தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை!

தமிழ் சினிமாவின் நடிகையர் திலகம் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் ஒரே கதாநாயகி நடிகை சாவித்திரி. பாதாள பைரவி எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமான நடிகை சாவித்திரி தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். 300 மேல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த சாவித்திரி இரண்டு திரைப்படங்களை சொந்தமாக தயாரித்துள்ளார். அந்த திரைப்படங்கள் குறித்த முழு தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதல் திரைப்படம் குழந்தை உள்ளம். 1969இல் சாவித்திரி ப்ரெட்க்ஷன் தயாரிப்பில் சாவித்திரியின் தெலுங்குத் திரைப்படமான சின்னாரி பாப்பலு (1968) படத்தின் ரீமேக் திரைப்படம் ஆக குழந்தை உள்ளம் திரைப்படம் வெளியானது. ஜெமினி கணேசன், வாணி ஸ்ரீ சௌகார் ஜானகி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. இத்திரைப்படத்திற்கு எஸ். பி. கோதண்டபாணி இசையமைக்க படத்தின் அனைத்து பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக தோல்வி படமாகவே கருதப்பட்டது.

இதை அடுத்து நடிகை சாவித்திரி தயாரித்த இரண்டாவது திரைப்படம் பிராப்தம். 1971ல் வெளிவந்த இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, நம்பியார், நாகேஷ் மற்றும் எஸ் வி ரங்கராவ் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் இந்த படத்தில் நல்ல பாடல்கள் இடம்பெற்றிருந்தது. சொந்தம் எப்போதும் தொடர்கதை தான், சந்தனத்திலே நல்ல வாசம் எடுத்து, நேத்து பறித்த ரோஜா போன்ற இனிமையான பாடல்கள் இடம் பெற்று இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. சாவித்திரியின் இரண்டாவது முறையாக தயாரித்து இயக்கிய இந்த திரைப்படம் 50 நாட்கள் வரை ஓடிய சுமாரான வெற்றி படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக நடிகை சாவித்திரி தன்னுடைய மூன்று சொந்த வீட்டை அடமானம் வைத்து படத்திற்காக செலவு செய்திருந்தார்.

எம்ஜிஆரின் படங்களை இயக்கி எம்.ஜி.ஆருக்கு சம்பதியாக மாறிய இயக்குனர் சங்கர் நட்பின் மறுபக்கம்!

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானார் சாவித்திரி. இந்த படம் தயாரிப்பதற்கு முன்னதாகவே ஜெமினி கணேசன் சாவித்திரியிடம் இந்த படத்தை எடுக்க வேண்டாம் எடுத்தால் இந்த படம் ஓடாது என்று எச்சரித்துள்ளார். ஆனால் அதையும் மீறி இந்த படத்தை சாவித்திரி தயாரித்து இயக்கினார். அதன் பின் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை சாவித்திரியும் ஜெமினி கணேசனும் பிரிந்து விட்டனர்.

இறுதியாக நடிகை சாவித்திரி இயக்கிய குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்த படங்களாக அமைந்துவிட்டன. இதில் மனம் உடைந்து சாவித்திரி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகு சில படங்களில் நடித்து வந்த சாவித்திரிக்கு தன்னுடைய 45 வது வயதிலே நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டார். ஒரு நாள் படப்பிடிப்பின் பொழுது திடீரென மயங்கி விழுந்த சாவித்திரி கோமாவிற்கு சென்றார். அடுத்து 19 மாதங்களுக்கு மேலாக கோமா எனும் ஆழ் மயக்கத்தில் இருந்த சாவித்திரி அதன் பின் குறைந்த வயதிலேயே மரணம் அடைந்து விட்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...