எம்ஜிஆரின் படங்களை இயக்கி எம்.ஜி.ஆருக்கு சம்பதியாக மாறிய இயக்குனர் சங்கர் நட்பின் மறுபக்கம்!

மக்கள் திலகம் எம்ஜிஆர் சொந்தமாக நான்கு படங்களை தயாரித்துள்ளார். அதில் முதல் திரைப்படம் நாடோடி மன்னன், இரண்டாவது உலகம் சுற்றும் வாலிபன், மூன்றாவது அடிமைப்பெண் நாடோடி, நான்காவது மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இதில் நாடோடி மன்னன், உலகம் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய மூன்று படங்களை அவரே இயற்றினார். மற்றொரு படமான அடிமைப் பெண் படத்தை அவர் இயக்கவில்லை. தானே ஒரு சிறந்த இயக்குனராக இருந்தும் தனது சொந்த படத்தை இயக்கும் வாய்ப்பை வேறு ஒரு இயக்குனருக்கு கொடுத்தார்.அந்த பாக்கியம் இயக்குனர் கே சங்கர் அவருக்கு கிடைத்தது.

நல்லவன் வாழ்வான் படைப்பிடிப்பு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தபோது முதன்முதலாக எம்ஜிஆரை சந்தித்தார் கே. சங்கர். அப்பொழுது சங்கர் பணியாற்றிய படங்களில் இருந்த சில தனித்துவமான காட்சிகளை குறிப்பிட்ட எம்ஜிஆர் மிகவும் புகழ்ந்து பாராட்டினார். எம்ஜிஆர் தன் படங்களை இவ்வளவு கவனித்திருக்கிறார் என்பதை நினைத்து சங்கரும் மிகவும் மகிழ்ச்சி கொண்டார். அதை அடுத்து வேலுமணி தயாரிப்பில் எம்ஜிஆர் நடிக்கும் பணத்தோட்டம் திரைப்படத்தை சங்கர் இயக்க வேண்டும் என விரும்பினார் எம்ஜிஆர். சங்கர் அதுவரை எம்ஜிஆர் பாணியில் ஆன திரைப்படங்களை இயக்கியது இல்லை, இந்த தயக்கத்தால் படத்தின் கதையை காரணம் காட்டி படத்தில் இருந்து விலக விரும்பினார் சங்கர். ஆனால் கதையை மாற்றும்படி எம்ஜிஆர் கூறிவிட்டதால் கள்ள நோட்டு பிரச்சினையை மையமாக வைத்து 18 நாட்களில் தயாரிக்கப்பட்டது பணத்தோட்டம் படம்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் முகம் சுளிக்க வைத்த கவிஞர் வாலி! படப்பிடிப்பில் நடந்த கலவரம்!

எம்ஜிஆர் படங்களில் வேலை செய்தால் நிறைய குறுக்கீடுகள் இருக்கும் தொந்தரவுகள் இருக்கும் என்று சினிமா உலகில் பயமுறுத்தி இருந்தார்கள். ஆனால் அது உண்மை அல்ல என்பதை சங்கர் பின்னாளில் தனது அனுபவத்தை குறிப்பிட்டிருந்தார். பணத்தோட்டம் பட வெற்றிக்கு பின் சங்கரிடம் எம்ஜிஆர் இந்த படத்தை டைரக்ட் செய்ய தயங்கினீர்கள் இப்பொழுது என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சங்கர் என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார். அதன் பின் கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், உழைக்கும் கரங்கள், பல்லாண்டு வாழ்க, இன்று போல் என்றும் வாழ்க என்று இருவர் கூட்டணியில் வெற்றி படங்கள் பல வந்தன.

அதை எடுத்து தனது சொந்த தயாரிப்பான அடிமைப்பெண் படத்தை இயக்கும் வாய்ப்பை சங்கருக்கு எம்ஜிஆர் கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பு பலப்பட்டது. அடிமைப்பெண் திரைப்படம் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டதற்கு காரணமும் சங்கர்தான். சாதாரணமாகவே எம்ஜிஆர் அதிகமாக செலவு செய்வார் தன் சொந்த படம் என்பதால் படத்தில் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் பணி செய்யும் ஊழியர்களுக்கும் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் எம்ஜிஆர். ஜெய்ப்பூர் அரண்மனையில் இந்த படம் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டு வந்தது. இந்த திரைப்படம் வெளியாகி எம் ஜி ஆருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில் சங்கர் எம்ஜிஆர் உடன் இணைந்து கலங்கரை விளக்கம் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது படப்பிடிப்பின் இடைவெளி நேரத்தில் தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷயத்தை இயக்குனர் சங்கர் எம் ஜி ஆர் இடம் கூறினார். கொஞ்சம் இருங்கள் என கூறிய எம்ஜிஆர் உடனே தன் அண்ணன் சக்கரபாணிக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இயக்குனர் சங்கரின் மகளை நம் ராமுவிற்கு பார்த்தால் என்ன என தன் அண்ணனிடம் கலந்து ஆலோசிக்க தொடங்கினார். அந்த நேரத்தில் சங்கருக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம் தயக்கமும் ஒரு பக்கம். உடனே எம்ஜிஆரும் ராமுவை நான் தான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன் அவனுக்கு உங்கள் பொண்ணை கொடுக்க உங்களுக்கு விருப்பமா என எம் ஜி ஆர் கேட்க ஷங்கர் சம்மந்தியாக மாறினார். நடிகர் எம்ஜிஆருக்கும் இயக்குனர் சங்கருக்கும் இருந்த மிகச்சிறந்த நட்பு நாளடைவில் குடும்பமாக மாறியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...