இவங்களுக்கு வயசே ஆகாதா..? பிகினி முதல் அம்மன் கேரக்டர் வரை பட்டையை கிளப்பிய ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 52 வயது ஆகும் நிலையில் தற்போதும் அவர் இளமையாக இருப்பதை பார்த்து இவங்களுக்கு வயசே ஆகாதா என்று நினைக்கும் அளவிற்கு அவர் உள்ளார். இப்போதும் கூட அவர் சிறப்பான கேரக்டரை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிகர் ரம்யா கிருஷ்ணன் சென்னையை சேர்ந்தவர். இவர் நடிகரும் அரசியல்வாதியுமான சோ.ராமசாமியின் நெருங்கிய உறவினராவார்.

இளையராஜாவுக்கே இசை டெஸ்ட் வைத்த தயாரிப்பாளர்.. வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட இசைஞானி..!

ரம்யா கிருஷ்ணன் சிறுவயதிலேயே பரதநாட்டியம், குச்சிப்புடி மற்றும் மேற்கத்திய நடனங்களை முறைப்படி பயின்றவர். 14வது வயதிலேயே மலையாள திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அவரது முதல் தமிழ் படம் ‘வெள்ளை மனசு’. ஒய்.ஜி.மகேந்திரா முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.

ரம்யா கிருஷ்ணனுக்கு முதன் முதலில் நாயகி வேடம் கிடைத்தது என்றால் அது ‘முதல் வசந்தம்’ என்ற திரைப்படத்தில்தான். சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் அவர் பாண்டியன் ஜோடியாக நடித்திருந்தார். இதனை அடுத்து ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘ஜல்லிக்கட்டு’, ‘கதாநாயகன்’, ‘மீனாட்சி திருவிளையாடல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய அளவில் புகழை பெற்று தந்தது என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ திரைப்படம்தான். இந்த படத்தில் அவர் நீலாம்பரி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். ரஜினிக்கு நிகராக இந்த படத்தில் வில்லியாக அவர் நடித்திருந்ததை பார்த்து ரஜினியே ஆச்சரியப்பட்டார் என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து ரம்யா கிருஷ்ணன் ஒரு சில சாமி படங்களிலும் நடித்தார். குறிப்பாக ராஜகாளியம்மன் என்ற திரைப்படத்தில் அம்மனாக நடித்து அனைவரையும் மிரட்டி இருப்பார். படையப்பாவுக்கு பிறகு ‘பஞ்சதந்திரம்’ என்ற படத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார். படப்பிடிப்பின்போது கமல்ஹாசனே அவரது நடிப்பை பாராட்டியதாக கூறப்பட்டது.

ஷங்கர் படத்தில் அறிமுகமான நடிகை.. மருமகளாக ஏற்று கொள்ள மறுத்த முதலமைச்சர்.. என்ன நடந்தது..?

இதனையடுத்து ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பற்றி உலகம் முழுவதும் தெரிய வைத்த படம் தான் ‘பாகுபலி’. இந்த படத்தின் இரண்டு பாகங்களிலும் அவர் ராஜமாதா சிவகாமி தேவி என்ற கேரக்டரில் நடித்து மிரட்டி இருப்பார். இந்த படத்தின் இரண்டு பாகங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு ரம்யா கிருஷ்ணனும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு மேலும் திருப்புமுனையை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடிகர் ரம்யா கிருஷ்ணன் கடந்த 2003ஆம் ஆண்டு கிருஷ்ண வம்சி என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘கலசம்’, ‘தங்கம்’, ‘ராஜகுமாரி’ ஆகிய சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். மேலும் ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்திருக்கிறார்.

ஒரு காட்சியை கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்த ‘திரிசூலம்’.. சிவாஜியின் 200வது படம்..!

மிகச்சிறந்த நடிகையான ரம்யா கிருஷ்ணன் கடந்த 35 ஆண்டுகளாக திரையுலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

Published by
Bala S

Recent Posts