நாகேஷ் படத்தில் நடித்தவர்… பின்னாளில் சுகாதாரத்துறை அமைச்சரின் மனைவியான நடிகை..!

நாகேஷ் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ என்ற திரைப்படத்தில் நடித்து பின்னாளில் ஆந்திர மாநில சுகாதாரத் துறை அமைச்சரை திருமணம் செய்து கொண்ட நடிகை ராஜஸ்ரீ குறித்து தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ராஜஸ்ரீ. இவர் தெலுங்கு திரையுலகில் கடந்த 1956ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்த இவர் ‘பணம் பந்தியிலே’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

இந்த படத்துல நடிச்சது சிவாஜியே இல்லை.. ஆஸ்கர் நிர்வாகிகள் நம்ப மறுத்த ’தெய்வ மகன்’ திரைப்படம்..!

rajasri3

இதனை அடுத்து தென்றல் வீசும், செங்கமலத் தீவு, குபேர தீவு, கலையரசி ஆகிய திரைப்படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்தார் ராஜஸ்ரீ. 1964ஆம் ஆண்டு வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற திரைப்படம்தான் இவருக்கு திருப்புமுனையை கொடுத்தது.

ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் முத்துராமன், ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ, காஞ்சனா உள்பட பலர் நடித்திருந்தனர். முத்துராமன் ஜோடியாக காஞ்சனாவும் ரவிச்சந்திரன் ஜோடியாக ராஜஸ்ரீயும் நடித்திருந்தனர். இந்த நான்கு கேரக்டர்கள்தான் இந்த படத்தில் முக்கியமான கேரக்டர்கள். படம் முழுக்க காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் நிறைந்திருக்கும். இந்த படம் ராஜஸ்ரீக்கு திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.

rajasri4

அதன் பிறகு எம்ஜிஆர் உடன் ‘நேற்று இன்று நாளை’ என்ற திரைப்படத்தில் அமுதா என்ற கேரக்டரில் மிக மிக அருமையாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். மீண்டும் எம்ஜிஆர் உடன் ‘பட்டிக்காட்டு பொன்னையா’, அடிமைப்பெண் உள்பட ஒருசில படங்களில் நடித்தார்.

காலையில் காதல், மாலையில் திருமணம்.. கமலுக்கு தங்கை, ரஜினிக்கு மகளாக நடித்த நடிகையின் வாழ்க்கைப்பாதை..!

இதனை அடுத்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘பாமா விஜயம்’ என்ற திரைப்படத்தில் கதையின் முக்கிய புள்ளியான நடிகை பாமா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அந்த காலத்தில் ஒரு நடிகை எந்த அளவுக்கு பந்தா பண்ணுவார், ஆடம்பரமாக இருப்பார் என்பதை ரசிகர்களுக்கு அந்த கேரக்டர் மூலம் அவர் கண் முன் காட்டி இருப்பார்.

rajasri4a

நடிகை ராஜஸ்ரீ கடந்த 1975ஆம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த தோட்டா பஞ்சாசனயம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக இருந்த இவர் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் என்பதும் என்.டி.ராமராவ் முதல்வர் ஆனபோது எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1975ஆம் ஆண்டு ராஜஸ்ரீ திருமணம் நடந்த நிலையில் எட்டு ஆண்டுகளில் அவரது கணவர் காலமாகிவிட்டார். ராஜஸ்ரீ கணவர் இறந்தபோது அவருடைய குழந்தைக்கு வெறும் 4 வயதுதான். அதன்பிறகு ராஜஸ்ரீ தனது குழந்தையை வளர்க்கும் முழு பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?

ராஜஸ்ரீ கலை சேவையை பாராட்டி கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு கலைமாமணி விருதை தமிழக அரசு வழங்கியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...