இவர நம்பி நடிக்க முடியாது.. இயக்குநருக்கு முதலில் டிமிக்கி காட்டிய பூர்ணிமா.. வெற்றியால் வாயை மூட வைத்த ஆர்.சுந்தர்ராஜன்!

ஓர் அறிமுக இயக்குநருக்கு கால்ஷீட் கொடுக்காமல், நடிக்க விருப்பமில்லாமல் தவிர்த்த நடிகை பூர்ணிமாவை எப்படியோ நடிக்க வைத்து அவருக்கு லைஃப் டைம் ஹிட் கொடுத்து தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர் இயக்குநரும், நடிகருமான ஆர். சுந்தர்ராஜன்.

நடிகை பூர்ணிமா ஆரம்பத்தில் “நெஞ்சில் ஒரு முள்’, ‘கிளிஞ்சல்கள்’ என்று இரண்டே இரண்டு படங்களில் நடித்து முடித்து இருந்தார். அதன் பின் பயணங்கள் முடிவதில்லை கதையை பூர்ணிமாவுக்கு சொல்வதற்காக அப்போது அறிமுக இயக்குநராக இருந்து ஆர்.சுந்தர்ராஜன் படாத பாடு பட்டிருக்கிறார்.

ஏனெனில் அந்த நேரத்தில் நிறைய முதல் பட இயக்குநர்கள் சொதப்பி இருந்தார்களாம். அறிமுக இயக்குனர்களே சரி இல்லை என்ற பேச்சுக்கள் திரையுலகத்தில் இருந்தது.
அதே மாதிரி இந்த படத்தின் வாய்ப்பு பூர்ணிமாவுக்கு வந்த செய்தி தெரிந்து நிறைய பிரபலங்களே எந்த இயக்குநர்களிடமும் உதவியாளராக இல்லையே.. அவர நம்பி நடிச்சா கேரியர் போய்விடும் என பூர்ணிமாவை பயமுறுத்தி இருக்கின்றனர்.

அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்

ஒரு நாள் இயக்குனர் நான்கைந்து முறை போன் செய்தும் எடுக்காமலே இருந்து வந்தாராம். இதையடுத்து அப்படத்தின் தயாரிப்பாளர் அரசியலில் இருந்தாராம்.
அதனால் பூர்ணிவுக்கு அமைச்சர்களிடம் இருந்தும் சிபாரிசு வந்து இருக்கிறது. இத்தனை பேர் சொல்லியதால் கதையாவது கேக்கலாம்ன்னு நினைச்சு இயக்குநரைக் கூப்பிட்டு பேசி இருக்கிறார். பாம்குரோவ் ஹோட்டல்ல ஆர்.சுந்தர்ராஜன் கதை சொன்னாராம்.

மொத்தக் கதையையும் மட்டுமல்லாமல் இடையில் வர பாடல்களையே பாடிக் காட்டி இருக்கிறார். அவரின் அந்த டெக்னிக்கில் பூர்ணிமா அசந்து விட்டார். இயக்குனருக்காக நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் அவரே நினைக்காத அளவுக்கு அந்த படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. பூர்ணிமா திரை வாழ்க்கையே வேற லெவலில் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மூலம் பூர்ணிமாவுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. ஹீரோவான மோகனுக்கும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. 1982-ல் வெளியான இப்படம் பாடல்களுக்காகவே அதிக நாட்கள் ஓடியது. இதில் இடம்பெற்ற 7 பாடல்களுமே இன்றுவரை ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது.

மேலும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஆர்.சுந்தர்ராஜனுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகளைக் கொடுத்தது. அதன்பின் ஆர்.சுந்தர்ராஜன் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, காந்தி பிறந்த மண், என் ஆசை மச்சான், ராஜாதி ராஜா, திருமதி பழனிச்சாமி, குங்குமச் சிமிழ், மெல்லத் திறந்தது கதவு போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.