48 வயதில் துணை தேடும் சூர்யாவின் மச்சினிச்சி… உருக்கமாகப் பேசிய பிரபல நடிகை

நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே தமிழ் சினிமாவைக் கலக்கியவர் அவரது மச்சினிச்சியும், நடிகை ஜோதிகாவின் அக்காவுமான நடிகை நக்மா. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் நக்மா. முதல்படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க தொடர்ந்து தமிழ் சினிமாவின் வசூல் சாதனைப் படமாக விளங்கும் பாட்ஷாவில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு நடித்தார்.

பாட்ஷா படம் நக்மாவை திரையுலகில் புகழின் உச்சியில் கொண்டு வந்து நிறுத்த தொடர்ந்து சரத்குமார், கார்த்திக், பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்களின் ஆஸ்தான ஹீரோயினாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். அஜீத்துடன் சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரியாக மிரட்டியவர், தீனா படத்தில் வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடலில் குத்தாட்டம் போட்டார்.

தொடர்ந்து நடித்து வந்தவர் 2008-ம் ஆண்டிற்குப் பின் நடிப்பிற்கு முழுக்குப் போட்டார். தற்போது 48 வயதாகும் நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், அவரது தங்கைகளாக ரோஷினி, ஜோதிகா ஆகியோர் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டனர். இதனிடையே சமீபத்தில் தனது திருமணம் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசியுள்ள நக்மா,“எனக்குத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமில்லை. எனக்கும் ஒரு துணை, குழந்தைகள் வேண்டும் என்று நினைக்கிறேன். திருமணத்தின் மூலம் ஒரு குடும்பம் உருவாக வேண்டும்.

சிவாஜி போட்ட தப்புக்கணக்கை தவிடுபொடியாக்கிய டி.எம்.எஸ்., சவால்விட்டு ஜெயித்த காந்தக்குரேலோன்

என் திருமணம் விரைவில் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் திருமணம் செய்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமல்ல ,” எனக் கூறியுள்ளார். நக்மாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நடிகர் சரத்குமார், கிரிக்கெட் வீரர் கங்குலி, ஹிந்தி நடிகர் மனோஜ் திவாரி, போஜ்புரி நடிகர் ரவி கிஷன் ஆகியோருடன் நக்மா காதல் கிசுகிசுவில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள் பலர் 40 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் நக்மாவின் இந்தப் பேச்சு நடிகைகள் மத்தியில் திருமணம் குறித்த யோசனையை விதைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.