நடிகை நதியாவின் உண்மையான வயது மற்றும் இளமை அழகின் ரகசியம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். சில படங்களில் அம்மா கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து படம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். அந்த வகையில் அம்மா கதாபாத்திரம் அனைவருக்கும் மிகவும் எளிதில் அமைந்துவிடாது. அப்படி அமைந்து அதில் இன்றளவும் பேசப்பட்டு வருபவர்களில் நடிகை நதியாவும் ஒன்று.

மலையாளம் சினிமா மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கி தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை நதியா. இவருக்கு தொடர்ந்து கிடைத்த நல்ல நல்ல படங்களால் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தார். பின்னர் நதியா திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்தார். இந்த படம்தான் இவருக்கு அம்மா கதாபாத்திரத்தை ரசிகர்களில் மனதில் ஆழமாய் பதிய வைத்தது. இப்போது தொடர்ந்து கிடைக்கும் நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் எம். எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தனது முதல் தமிழ் திரைப்படமாக ‘எல். ஜி. எம்’ எனும் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது. முழு நீள குடும்ப பொழுதுபோக்கு படமான இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து அசத்திள்ளனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை நதியாவின் வயது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சற்றும் தாமதிக்காமல் 56 வயது என பதில் கூறினார். தனது 56 வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கும் ரகசியத்தை நடிகை நதியா தற்போது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

விஜய்யின் இந்த வெற்றி படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரம்பாவா? இப்போ ஃபீல் பண்ணி என்ன பண்ணுறது?

எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நதியா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார். அதேபோல் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் புகைப்படங்களையும் வெளியிடுவார் என்பதை அனைவரும் பார்த்திருப்போம். 56 வயதிலும் மிகவும் இளமையாக காணப்படும் நடிகை நதியாவின் அழகின் சீக்ரெட் அவர் செய்யும் உடற்பயிற்சிகள் தான் என்று அவர் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...