தமிழில் நடிச்ச ரெண்டு படமும் ஹிட்… ஆனாலும் தொடர்ந்து நடிக்காத நடிகை.. இதான் விஷயமா?..

தமிழில் ஒரே திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகும் நடிகர் மற்றும் நடிகைகள் ஏராளமானோர் இருப்பார்கள். அவர்களில் சிலர் தொடர்ந்து நடித்து கொண்டே இருப்பார்கள். மீதமுள்ள சிலர், நல்ல பேர் கிடைத்த போதிலும் ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதுடன் திரை பயணத்துக்கும் முழுக்கு போட்டு விடுவார்கள்.

அந்த வகையில், தமிழில் இரண்டே படங்கள் நடித்து புகழ் பெற்ற போதிலும் அதன் பின்னர் நடிப்பதை நிறுத்திய நடிகை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’நாயகன்’ என்ற திரைப்படத்தில் தான் நடிகை கார்த்திகா தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்திருப்பார்.

நாயகன் படத்தில் கமலுக்கு இணையாக சில காட்சியில் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் கார்த்திகா. கமல்ஹாசன் வன்முறையில் ஈடுபடுபவர் என்பதை தெரிந்து கொண்டு அவருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளில் நடித்த போது மணிரத்னமே அவரை பாராட்டினார் என்றும் கூறப்படுவதுண்டு. அதேபோல், ஜனகராஜை கார்த்திகா அடிக்கும் காட்சியில் கமல்ஹாசன் கோபப்படுவது, அதற்கு கார்த்திகா எதிர் கேள்வி கேட்கும் காட்சி என கமலுக்கு போட்டி போட்டு கார்த்திகாவும் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். கமலஹாசன் மகளாக மிகவும் குறைந்த காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் ’நாயகன்’ படத்தில் அவரது நடிப்பை ரசிகர்களால் மறக்க முடியாது.

இதனையடுத்து பாசில் இயக்கத்தில் உருவான ‘பூவிழி வாசலிலே’ என்ற திரைப்படத்தில் கார்த்திகா நடித்தார். சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் அவர் நாயகியாக நடித்தார். இந்த படமும் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்திருந்தது. தமிழில் இரண்டே படங்களில் நடித்து கவனம் ஈர்த்திருந்த கார்த்திகா, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் அவர் பல மலையாள படங்களில் அவர்  தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். இந்த நிலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு சுனில் குமார் என்ற மருத்துவரை நடிகை கார்த்திகா திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு அவர் நடிப்பில் இருந்து கிட்டத்தட்ட விலகிவிட்டார். 1991 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஒரு மலையாள படத்தில் நடித்தார் என்றாலும் அதில் அவருக்கு சிறப்பு தோற்றம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகு திரை உலக வெளிச்சம் வேண்டாம் என்பதில் நடிகை கார்த்திகா உறுதியாக இருந்தார். அதனால் தான் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு திரை உலகில் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்த போதிலும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கணவர், குடும்பம் என்று அவர் தனது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டார். இருப்பினும் அவர் நடித்த இரண்டு தமிழ் திரைப்படங்கள் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைவார்கள்.

திருமணத்திற்கு பிறகு எத்தனையோ நடிகைகள் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினாலும் கார்த்திகா இந்த விஷயத்தில்  திருமணத்திற்கு பிறகு நடிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.