18 வயதில் கொடிகட்டி பறந்த நடிகை திவ்யபாரதி.. 19 வயதில் ஏற்பட்ட சோகம்.. என்ன நடந்தது?

16 வயதில் திரையுலகில் நடிக்க வந்து 18 வயதில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று கொடிகட்டி பறந்த நடிகை திவ்யா பாரதி 19வது வயதில் மர்மமான முறையில் மறைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

சத்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான ’நிலா பெண்ணே’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் கடந்த 1990 ஆம் ஆண்டு நடிகை திவ்யா பாரதி நடிகையாக அறிமுகமானார். அவருக்கு அப்போது வெறும் 16 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தில் மித மிஞ்சிய கிளாமர் காட்சிகள் இருந்ததை அடுத்து அவர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பானார். இதனை அடுத்து அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் கொடிகட்டி பறந்தார்.

divya bharathi1

குறிப்பாக ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர்கள் அவரை தங்களுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்துமாறு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இடம் நேரடியாக கூறியதாக கூறப்பட்டது. பாலிவுட்டில் நடிகர்களுக்கு இணையாக அவரது சம்பளம் இருந்தது என்றும் அவர் வாங்கிய சம்பளத்தை வேறு எந்த பிரபல நடிகையும் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

திருமணமே வேண்டாம் என்று இருந்த மாதவி.. சாமியார் கை காட்டியவரை திடீரென திருமணம் செய்த அதிசயம்..!

18 வயதிலேயே திரை உலகில் மிக குறைந்த வயதில் 20 படங்களில் நடித்த திவ்யபாரதி திடீரென காதலில் விழுந்தது தான் அவரது மிகப்பெரிய சரிவு. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை காதலித்த அவர் ஒரு சில மாதங்களில் திருமணம் செய்து கொண்டார் என்றும் ஆனால் அவரது திருமணம் ரகசியமாக நடந்தது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் அவர் தன்னுடைய வீட்டில் பால்கனியில் இருந்தபோது திடீரென அங்கிருந்து தவறி விழுந்ததாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் பால்கனியிலிருந்து கீழே விழும் போது அவரது குடும்பத்தினர் மற்றும் வேலைக்காரர்கள் உட்பட பலர் இருந்தும் அவரது மரணம் இன்று வரை மர்ம மரணமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

divya bharathi

அவரது மரணம் தற்கொலையா? கொலையா? அல்லது தெரியாமல் தவறி கீழே விழுந்தாரா என்பது கடைசி வரை கண்டுபிடிக்க முடியாத ரகசியமாக இருந்து வருகிறது.

16 வயதில் ஹீரோயின், 17 வயதில் திருமணம்.. 18வது வயதில் தற்கொலை.. என்ன நடந்தது நடிகை ஷோபா வாழ்வில்..?

நிலா பெண்ணே என்ற ஒரே ஒரு தமிழ் திரைப்படத்தில் அவர் நடித்தாலும் இன்னொரு தமிழ் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார் என்றும் ஆனால் அந்த படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருக்கும்போது இறந்து விட்டதால் அந்த படத்தின் மீது காட்சிகளை ரம்பா நடித்து கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

ஒரே ஒரு படத்திலேயே தமிழ் திரை உலகில் ஏராளமான ரசிகர்களை பெற்ற திவ்யபாரதியின் மரணம் தமிழ் ரசிகர்களையும் உலுக்கியது.

18 வயதில் திருமணம்.. 5 ஆண்டுகளில் விவாகரத்து.. 3 குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா..!

இறப்புக்கு முன் அவர் நடித்துக் கொண்டிருந்த மூன்று ஹிந்தி படங்கள் அவரது மறைவிற்கு பின்னர் வேறு சில நடிகைகளை டூப் வைத்து வெளியிட்டனர். அந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட்டானது.

நான் திவ்யபாரதியின்  ரசிகை, ரசிகர் என்று பல முன்னணி பிரபலங்கள் சமீபத்தில் கூறியுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் வருண் தேவ்.

வருண் தேவ் நான் திவ்யபாரதியின் தீவிர ரசிகர் என்று பல பேட்டிகளில் கூறியதுண்டு. குறிப்பாக அனுஷ்கா சர்மா, தான் திவ்யபாரதியின் நடனத்திற்கு மிகப்பெரிய அடிமை என்றும் தான் ஆடும் நடனங்களில் அவரது சாயல் நிச்சயம் இருக்கும் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews