23 வருடங்கள் ஆகியும் இன்னும் மச்சானிடம் பேசாத பிரபல நடிகர்.. அக்காவின் காதல் திருமணத்தால் முறிந்த உறவு

வங்காள மொழியில் அறிமுகமாகி அதன்பின் மலையாளத்தில் ஒரு படம் நடித்து விட்டு தமிழில் தொட்டா சிணுங்கி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை தேவயாணி. குடும்பப் பாங்கான முகம், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம். இயல்பான நடிப்பு, போன்றவற்றால் குறுகிய காலத்திலேயே தமிழில் முன்னணி நடிகையானார் தேவயானி.

அப்போது பிஸியாக இருந்த குஷ்பு, மீனா, ரம்பா, சிம்ரன் போன்ற நடிகைகளுக்கு போட்டியாக வந்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வந்தார் தேவயானி. தொடர்ந்து குடும்பப் பாங்கான படங்களில் நடித்தும் முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் ஆகியது.

இப்படி சினிமாவில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருந்த தேவயானியின் தம்பியும் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்கள் மூலம் ஹிட் ஆனார். மேலும் பிரபல பின்னணிப் பாடகராகவும் ஜொலித்தார். இப்படி அக்கா, தம்பி இருவருமே தமிழ்சினிமாவைக் கலக்கி வர தேவயானியோ விண்ணுக்கும், மண்ணுக்கும் பட ஷுட்டிங்கின் போது இயக்குநர் ராஜகுமாரனுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

தலைவர் 171.. ‘கூலி’ டீசர் எப்படி இருக்கு? LCU ல இருக்கா இல்லையா?

முன்னனி நடிகையாக இருந்த போதே திருமணம் செய்து கொண்டதால் அப்போது இந்தச் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. தேவயானியின் பெற்றோர் காவல்துறையில் புகாரும் அளித்தனர். இருப்பினும் இருவரும் சிறந்த இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டனர்.மேலும் தேவயாணிக்கு சற்று பட வாய்ப்புகள் குறைய சீரியல் பக்கம் திரும்பினார். கோலங்கள் சீரியல் இவரை ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே மாற்றியது.

அதன்பின்னர் தமிழகமே தூக்கிக் கொண்டாடிய இந்த ஜோடியை தேவயானியின் தம்பி நகுல் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லையாம். இன்றுவரை அது தொடர்கிறதாம். தேவயானிக்கு இரண்டு தம்பிகள் உள்ள நிலையில் இன்னொருவர் சமாதானம் ஆகி இவர்களுடன் தொடர்பில் இருக்கிறாராம். ஆனால் நகுல் மட்டும் ராஜகுமாரனுடன் பேசுவது கிடையாதாம். இதுபற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்த ராஜகுமாரன் நகுலுக்கு எங்கள் மேல் உள்ள கோபம் இன்னும் தீரவில்லை. எனவே அவர் என்னுடன் பேசுவது கிடையாது. ஆனால் மற்றொருவர் பேசுவார் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நகுல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...