மீண்டும் திருமணத்திற்குத் தயாராகிறார் அமலாபால்…?! அதற்காக இப்படியா இளசுகளை சூடேற்றுவது..?

தமிழ்த்திரை உலக நடிகைகளில் சொக்க வைக்கும் பேரழகி அமலாபால் என்றால் ரசிகர்கள் ஒத்துக் கொள்வார்கள். இவர் மலையாளத் திரை உலகைச் சேர்ந்தாலும் தமிழ்ப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தெய்வத்திருமகள் படத்தின்போது இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் காதல் கொண்டு திருமணம் செய்தார்.

அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்தும் செய்து கொண்டார். தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுடன் இணைந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அமலாபால்.

Amala paul 2
Amala paul 2

அதன்பிறகு சமூகவலை தளங்களில் பிசியாக போட்டோக்களைப் பகிர்ந்து கொண்டார். ஆடை படத்திற்குப் பிறகு காணாமல் போன அமலாபால் அவ்வப்போது ஹாட் போட்டோக்களை சமூகவலை தளங்களில் பகிர்ந்து கொண்டார்.

தற்போது அவரது நண்பர் ஜெகத் தேசாய் இன்ஸ்டாவில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மை ஜிப்ஸி குயின் சொன்னது ஆம் என்ற ஹேஷ்டாக்குடன் திருமணத்திற்கான மணியை அடித்தாற்போல பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாவில் கட்டி வாரி அணைத்தபடி இதழ்முத்தம் பதித்து சூடேற்றியுள்ளனர் இந்த ஜோடிகள்.

ஜெகத் சொன்னதை ஏற்றுக்கொண்ட அமலாபால், அந்த வீடியோவில் அவரது அன்பு கலந்த முத்தத்தையும் அவருக்குப் பரிசாகத் தந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெகத் பகிர்ந்துள்ள இந்தப் படம் இருவரது காதலையும் உறுதிப்படுத்தும் விதத்தில் இருந்தது. தலைவா, தேவா, திருமகள் மற்றும் பிற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய் அமலா பாலை 2014ல் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இருவரும் 2015ல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். விவாகரத்துக்குப் பின் விஜயின் தந்தை பிரிந்ததற்கு தனுஷ் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

Amala paul1
Amala paul1

அதைத் தொடர்ந்து அமலா பால் பேட்டி ஒன்றில் தனது விவகாரம் தொடர்பாக வந்த செய்திகள் அனைத்தும் போலியானவை என்றார். தனது முன்னாள் கணவருடன் பிரிந்து செல்ல முடிவு செய்ததாகவும், வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கும் ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்தில் அமலாபால் நடிக்கிறார். ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஆசிப் அலி நடிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews