இளமை புதுமை சொர்ணமால்யாவின் இன்னொரு பக்கம் : எமோஷனல் பேட்டி

பெப்ஸி உமாவை ஞாபகம் இருக்கிறதா?  90’s கிட்ஸ்களின் பிரபல நிகழ்ச்சியான சன்டிவியில் ஒளிபரப்பான பெப்ஸி உங்கள் சாய்ஸ் பாடல் நிகழ்சசி மூலம் கவனம் ஈர்த்துப் புகழ் பெற்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அவரின் இடத்தை நிரப்ப இளமை புதுமை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கவனம் ஈர்த்தவர்தான் ஸ்வர்ணமால்யா. இவரின் துறுதுறு பேச்சை ரசிக்க இரசிகர்கள் பலர் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் டிவி முன் தவம் கிடந்தனர்.

இந்நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து மாடலிங் துறையிலும் கால்பதித்து பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார் ஸ்வர்ணமால்யா. முறைப்படி பரதம் கற்றுக் கொண்டு  நடனத்திலும் தனது முத்திரையைப் பதித்து வருபவர். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதில் பொன்னியாக ஷாலினியின் சகோதரியாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்வர்ணமால்யா மொழி படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்து பெயர் பெற்றார். மேலும் எங்கள் அண்ணா படத்தில் கேப்டன் விஜயகாந்திற்கு தங்கையாகவும், பிரபுதேவா ஜோடியாகவும் நடித்துள்ளார்.

2002-ல் தனது 21 வயதில் அர்ஜுன் என்பவரைத் திருமணம் செய்து  கொண்டு நடிப்பு மற்றும் மீடியா துறைகளுக்கு முழுக்குப் போட்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை கொஞ்ச காலம் கூட நிலைக்க வில்லை. விரைவிலேயே இத்தம்பதியினர் விவாகரத்துப் பெற்றனர்.

பின்வாங்கிய எதிர்நீச்சல் : மாரிமுத்து மரணத்தால் மரண அடி வாங்கிய டி.ஆர்.பி

இந்நிலையல் யூடியூப் சேனல் ஒன்றில் சொர்ணமால்யா அளித்த பேட்டியில், “எங்களது திருமணம் நடந்த போது தனக்கு 21 வயது தான் ஆனதாகவும், அப்போது எதையும் பகுத்தாராயும் பக்குவமும் இல்லை என்றும், அமெரிக்காவின் வாழ்க்கை முறையும் பிடிக்கவில்லை என்றும் கூறினார். மேலும் எங்களுக்கு விவாகரத்துக்கு என்ன காரணம் என்று கூட அறியவில்லை எனவும், இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என யோசித்தாக கூறினார்.

பின்னர் மனநல சிகிச்சை எடுத்து 2 மாதங்களுக்குப் பிறகுதான் அதிலிருந்து மீண்டதாகவும் அப்பேட்டியில ஸ்வர்ணமால்யா தெரிவித்திருக்கிறார்.“ தற்போது நடனப் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார் ஸ்வர்ணமால்யா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews