பின்வாங்கிய எதிர்நீச்சல் : மாரிமுத்து மரணத்தால் மரண அடி வாங்கிய டி.ஆர்.பி

ஊடகத் துறையில் நாடகங்களுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. சினிமா வராத காலங்களுக்கு முன் நாடகங்களே மக்களின் பிரதான பொழுது போக்காக இருந்து வந்தது. மேடை நாடகங்கள் மூலம் சினிமாவில் தோன்றி கோலோச்சியவர்களை பட்டியலிட முடியாது. அந்த வகையில் சினிமாவில் நடிப்பதற்கு முதல் அனுபவமே நாடகங்களாகத்தான் இருந்துவருகிறது.

தற்போதும் நாடகங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று மெகா தொடர்களாக உருமாறி இன்று ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு உறுப்பினராய் ஆட்சி நடத்துகின்றன என்றே சொல்லாம். தனியார் தொலைக்காட்சிகளின் வரவு அதிகமானதால் நாடகங்கள் எடுக்கும் எண்ணிக்கையும் அதிகமாகியது. ஆடியன்ஸை அரைமணி நேரம் உட்கார வைப்பதற்காக இயக்குநர்கள் புதிது புதிதாக நாடகத் திரைக்கதைகளை உருவாக்கி வருகின்றனர்.

இதில் இயக்குநர் திருச்செல்வம் சீரியல் இயக்குநர்களில் தனி முத்திரையைப் பதிப்பவர். சன்டிவியில் கோலங்கள் என்னும் மெகாத் தொடரை இயக்கி தனி ராஜ்ஜியம் நடத்தியவர். தொல்ஸ் ஆக இவரும் நடித்து புகழ்பெற்றார். தற்போது இவரின் அடுத்த படைப்பான எதிர்நீச்சல் தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இதில்நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து ஆதி குணசேகரன் என்ற ஆணாதிக்கம் நிறைந்த கேரக்டரில் நடித்தார். அவரின் திடீர் மரணம் சீரியலின் போக்கையை மாற்றியது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஆதிகுணசேரகன் இருக்கிறார் என்பதை அவரின் பிரமாதமான நடிப்பு சுட்டிக் காட்டியது. திரைப்படங்களில் நடித்து புகழ் பெறாத மாரிமுத்து ஆதிகுணசேகரனாக வாழ்ந்து உச்சம் தொட்டு திடீரென மறைந்தார். தற்போது அவருடைய கதாபாத்திரத்துக்குப் பதிலாக எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

ஒரே படத்தில் இணையப் போகும் 4 மாஸ் இயக்குநர்கள் : வெளியான செம அப்டேட்

எனினும் அவருடைய நடிப்பை ஈடுசெய்ய முடியவில்லை. இன்னமும் ஆதிகுணசேரகன் இடம் வெற்றிடமாகவே உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்துக்காகவே சீரியல் பார்த்த பல ரசிகர்கள் தற்போது எதிர்நீச்சல் பார்ப்பதை தவிர்க்கின்றனர். இதனால் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மரண அடி வாங்கியுள்ளது எதிர்நீச்சல்.

மேலும் சன்டிவியில் தினமும் இரவு 8மணிக்கு ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே தொடர் தற்போது பரபரப்பு திருப்பங்களுடன் நிறைந்து ஒளிபரப்பாவதால் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த சீரியலைப் பார்க்கின்றனர். இதனால் சிங்கப் பெண்ணே டி.ஆர்.பி ரேட்டிங்கில் எகிறியுள்ளது. இதற்கு அடுத்ததாக கயல் சீரியல் இடம்பெற்றுள்ளது. முதலிடத்தில் இருந்த எதிர்நீச்சல் அடுத்தடுத்து பின்னோக்கிச் செல்கிறது.

2K கிட்ஸையும் சீரியல் முன் உட்கார வைத்த எதிர் நீச்சல் தொடர் மீண்டும் டி.ர்.பி தர வரிசையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews