ஊர்வசி ஹீரோயினா வேணாம்.. இணைந்து நடிக்க பயந்த நடிகர்கள்?.. காரணமே சுவாரஸ்யமா இருக்கே..

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக, அவர்களுடன் போட்டி போட்டு நடிக்கும் அளவுக்கு நடிகைகள் ஏராளமானோர் உள்ளனர். அந்த வகையில், நிச்சயம் நாம் கண் மூடிக் கொண்டு நடிகை ஊர்வசி பெயரை சொல்லிவிடலாம். கேரள மாநிலத்தை சேர்ந்த ஊர்வசியின் சகோதரிகளான கலாரஞ்சனி மற்றும் கல்பனா ஆகியோரும் கூட சினிமா நடிகைகள் தான். இதில் நடிகை கல்பனா உயிரிழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய ஊர்வசி, தொடர்ந்து மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும் வளர்ந்திருந்தார். இதனிடையே, பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயாகியாக அறிமுகமானார் ஊர்வசி. இதனைத் தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்துள்ளார் ஊர்வசி. அதே போல, பிரபு, சத்யராஜ் என அந்த சமயத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஊர்வசியின் நடிப்பில் சிறப்பம்சமாக பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதிலும் காமெடியாக, எமோஷனலாக, சீரியஸான ஒரு கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் பின்னி பெடல் எடுத்து விடுவார் ஊர்வசி. மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், சிவா மனசுல சக்தி என பல திரைப்படங்களில் காமெடியில் சிக்ஸரை பறக்க விட்டிருப்பார். அதே போல, ஊர்வசி நடிக்கும் காட்சிகளில் அவரைத் தவிர உடன் இருப்பவர்கள் யாரையும் பார்க்க தோணாத அளவுக்கு நடிப்பில் புதுமை செய்யக்கூடிய திறமை அவருக்கு உண்டு.

நடிகையாக நடிப்பதை நிறுத்தி விட்டு, பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஊர்வசி நடிக்கத் தொடங்கிய போது கூட அவரது கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. வாமனன் திரைப்படத்தில் ஜெய் மற்றும் சந்தானம் ஆகியோருடன் இணைந்து ஊர்வசி செய்த காமெடி காட்சிகள் நினைத்தாலே சிரிப்பு வரவைக்கக் கூடியவை.
Magalir Mattum

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென் இந்திய திரைப்படங்களில் டாப் ஹீரோயினாக கலக்கிய ஊர்வசி, சினிமா துறையில் வென்றுள்ள விருதுகள் பட்டியலை ஒரு புத்தகமாக கூட வெளியிடலாம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சினிமா மீது அர்பணிப்பாக இருந்து நடித்து வருபவர் ஊர்வசி.

அப்படி இருக்கையில், தனது நடிப்பால் பலரையும் தன் பக்கம் ஈர்த்த ஊர்வசியுடன் இணைந்து நடிக்க நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்ற தகவல், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தன்னுடன் எப்படிப்பட்ட நடிகர்கள் நடித்தாலும் தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை அவர் பக்கம் ஈர்க்ககூடிய ஆற்றல் படைத்தவர் ஊர்வசி. இப்படி அவரின் சிறப்பு தான் அவருக்கு எதிர்ப்பாகவே இருந்தது.

ஏனென்றால், ஊர்வசி தங்களுடன் நடிக்கும் போது தங்களின் இமேஜ் அடிவாங்கி ஊர்வசியை தான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என பல நடிகர்களுக்கும் ஒருவித அச்சம் இருந்தது. இதன் காரணமாகவே பலரும் ஊர்வசியை கதாநாயகியாக தங்கள் படத்தில் நடிக்க வைக்க பல ஹீரோக்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், இன்னொரு பக்கம் தமிழ் சினிமாவில் பல படங்களில் தனக்கு ஜோடியாக ஊர்வசியை நடிக்க வைத்து அவருக்கான அங்கீகாரம் கொடுத்து அழகு பார்த்தவர் என்றால் அது உலக நாயகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.