புலம்பெயர் தொழிலாளர்களை தனி விமானத்தில் சொந்த ஊர் அனுப்பிய வில்லன் நடிகர்!!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பெரிய அளவில் மாட்டிக் கொண்டு முழிப்பது என்னவோ இந்தியா முழுவதிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள்தான். ஆமாங்க, உண்ண உணவுக்கு பண வசதி ஏதும் இல்லாதநிலையில், தொழில்களும் எதுவும் இயங்காத நிலையில் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.

அதிலும் போக்குவரத்து வசதிகள் முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையில், அவர்கள் பல நூறு மைல்கள் நடைபயணம் மேற்கொண்டும், சைக்கிள் போன்றவற்றிலும் பயணம் செய்து வருகின்றனர்.

610475d15d017d44d817921d09f2fa49

அரசாங்கம் இவர்களுக்கு சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊர் அனுப்பும் வசதிகளை குறைந்த அளவில் செய்து வருகின்றது. அந்தவகையில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் வில்லன் நடிகர் ஒருவர் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகிறார்.

ஆமாங்க ஒஸ்தி, சந்திரமுகி போன்ற படங்களில் நடித்த நடிகர் சோனு சூட் தொடர்ந்து பல பஸ்களை வைத்து, புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது கேரளாவில் சிக்கியுள்ள 177 வெளிமாநில பெண் தொழிலாளர்களை தனிவிமானம் மூலம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சொந்த ஊர்களுக்கு பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்து செல்வதை பார்க்கும்போது என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை” என்று கூறியுள்ளார். இவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தன்னுடைய 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றினையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...