இதுக்கெல்லாம் விளக்கம் தேவையா? மத நம்பிக்கை குறித்து விஷால்

அண்மைக் காலங்களாக நடிகர் விஷால் அடிக்கடி சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறார். ‘செல்லமே‘ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால் இயக்குநர் லிங்குசாமியின் சண்டைக் கோழி படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாறி சமீபத்தில் மார்க் ஆண்டனி படம் வரை வெற்றியைக் கொடுத்தவர். இயக்குநர் பாலாவின் அவன்-இவன், மிஷ்கினின் துப்பறிவாளன் ஆகிய படங்களில் விஷாலின் நடிப்புத் திறமையைப் பார்க்கலாம்.

இருப்பினும் விஷாலை ஒரு ஆக்சன் ஹீரோவாகவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது ரத்னம் படத்தில் நடித்து வருகிறார் விஷால் இயக்குநர் ஹரியுடன் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பின் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இதில் ரசிகர் ஒருவர் விஷாலிடம் நீங்கள் அடிக்கடி சாப்பிடுவதற்கு முன் அனைத்து கடவுள்களையும் வணங்குவதன் காரணம் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு விஷால், “நான் ஒன்றும் இந்தப் பழக்கத்தினை வெறும் பப்ளிசிட்டிக்காகச் செய்யவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக இதைச் செய்து வருகிறேன். கழுத்திலும் கூட பாருங்கள் ஜீசஸ் டாலரையும், இந்துக் கடவுள் டாலரையும் போட்டிருக்கிறேன். எனக்கு அனைத்து கடவுள்களும் ஒன்றுதான். இன்று நான் போட்டிருக்கும் இந்த சட்டை, பேண்ட், ஷு கூட ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு சம்பளமாகக் கொடுத்த பணம் தான்.

இசையமைப்பளார் தேவாவின் ஒயிட் & ஒயிட் டிரஸ்ஸுக்குப் பின்னால இப்படி ஒரு சம்பவமா? ஆளையே மாற்றிய பாடகர்

என்னைப் பொறுத்தவரை மற்றவர்கள் பார்ப்பதற்காக நான் சாப்பிடும் போது கடவுள்களை வணங்குவதில்லை. உண்மையாகவே வணங்குகிறேன். எனக்குக் கடவுள் கேமராதான். இந்தக் கேமிராதான் எனக்குச் சோறு போடுகிறது. இதனால் நான் இவ்வாறு செய்வது ஒன்றும் பெரிதல்ல.. எனக்கு சாமி எடுத்த ஹரியும் சாமிதான்.. லிங்கு சாமியும் சாமிதான்“ என்று அந்நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த சில தினங்களில் விஷாலும் கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியானது. பின்னர் அவற்றிற்கு பதிலளித்த விஷால் தேவை எனில் கட்டாயம் அரசியல் களத்திற்கு வருவேன் என்பது பே

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews