பல வருசத்துக்கு முன்னாடி சூர்யா கண்ட கனவு.. அப்படியே கண்முன் நிகழ்த்தி மேஜிக் செய்த லோகேஷ் கனகராஜ்!

மாநகரம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

முதல் திரைப்படமே பெரிய அளவில் ஹிட்டானதால் இரண்டாவது திரைப்படத்தில் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷிற்கு கிடைத்தது. இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைய, அடுத்த திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தையும் லோகேஷ் இயக்கி இருந்தார்.

இப்படி தொட்டதெல்லாம் தூள் பறக்க, அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம், இந்திய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என முன்னணி நடிகர்கள் நடித்த இந்த திரைப்படம், 2022 ஆம் ஆண்டின் நம்பர் 1 தமிழ் திரைப்படமாகவும் உருமாறி இருந்தது. மேலும், இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர் சூர்யா, ROLEX என்ற சிறப்பு வில்லன் கத்பாத்திரத்தில் தோன்றி மிரட்டி இருந்தார்.

இதற்கடுத்து, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். தமிழ் சினிமாவின் பல வசூல் சாதனைகளை லியோ முறியடித்துள்ள சூழலில், அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தையும் லோகேஷ் இயக்க உள்ளார். இதுவரை 5 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள லோகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை பலரும் மிரண்டு போய் பார்த்து வருகின்றனர்.
Surya-Rolex

இது ஒருபுறம் இருக்க, கைதி, விக்ரம், லியோ என தான் இயக்கிய படங்களை LCU Universe கீழ் கொண்டு வந்து, அனைத்து ஹீரோக்களையும் ஒரே திரைப்படத்தில் கொண்டு வரும் முயற்சிகளிலும் லோகேஷ் ஈடுபட்டுள்ளார். விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ, லியோ படத்தில் கமல்ஹாசன் போன் கால் என LCU Universe-க்கான பணியையும் கச்சிதமாக செய்து வருகிறார்.

இதனிடையே, நடிகர் சூர்யா பல ஆண்டுகளுக்கு முன் கண்ட கனவு ஒன்று, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலம் நிறைவேறிய விஷயம், ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
vijay leo

விஜய் டிவியின் காபி வித் டிடி நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன் கலந்து கொண்ட சூர்யா, “தனி ஹீரோ படங்கள் நிறைய வருகிறது. 4,5 முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் வெளிவர வேண்டும். சம்பளம், மார்க்கெட் எதையும் பார்க்காமல் அனைவரும் இணையும் படங்கள் வர வேண்டும் என பலமுறை தோன்றும்” என பெரும் ஆசையுடன் அவர் குறிப்பிட்டிருப்பார்.

அப்படி இருக்கையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் சூர்யா குறிப்பிட்டது, லோகேஷ் கனகராஜ் மூலம் நிறைவேறியதுடன் அதில் சூர்யாவுக்கும் ஒரு லைஃப்டைம் கதாபாத்திரமான ரோலக்ஸ் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.