ஹீரோவாக நடித்து வில்லனாக மாறிய சுமன்.. 10 மொழிகள்.. 700 படங்கள் நடித்து சாதனை..!

ரஜினிகாந்த், சத்யராஜ் போன்றவர்கள் வில்லனாக நடித்து ஹீரோவாக புரமோஷன் ஆனார்கள் என்றால் ஜெய்சங்கர் போன்ற நடிகர்கள் ஹீரோவாக நடித்து வில்லனாக மாறினார்கள். அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் சுமன், அதன்பிறகு ஒரு காலகட்டத்தில் வில்லனாக மாறினார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கேரக்டர்கள் என இவர் 10 மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை செய்துள்ளார்.

‘நீச்சல் குளம்’ என்ற திரைப்படத்தில் நடிகராக சுமன் அறிமுகமானாலும் அவர் ஹீரோவாக ஸ்டார் அந்தஸ்து பெற்ற படம் என்றால் அது ‘இளமைக் கோலம்’ என்ற படம் தான். ராதிகா மற்றும் பிரதாப் போத்தன் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவின் அப்பா கேரக்டர் நடிகர்.. குணச்சித்திர கேரக்டரில் கலக்கிய ஜெய்கணேஷ்..!

அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தீ’ என்ற திரைப்படத்தில் ரஜினியின் சகோதரராக நடித்தார். கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியை சுட்டுக் கொல்லும் ஒரு காட்சியில் அவர் உருக்கமாக நடித்திருப்பார்.

இதனையடுத்து கமல்ஹாசனுடன் ‘கடல் மீன்கள்’ படத்தில் நடித்த அவர் ஹீரோவாக ‘எனக்காக காத்திரு’ என்ற படத்தில் நடித்தார். ‘அஞ்சாத நெஞ்சங்கள்’, ‘எல்லாம் இன்பமயம்’ உள்பட சில படங்களில் நடித்த சுமன் அதன் பிறகு தெலுங்கில் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கேரக்டர்களிலும் நடித்தார்.

கிட்டத்தட்ட தமிழ் திரையுலகையே சுமன் மறந்துவிட்ட நிலையில் நீண்ட இடைவேளக்கு பிறகு 1994ஆம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ரோஜா நடித்த ‘அதிரடிப்படை’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு ரீஎன்ட்ரி ஆனார். அதன் பிறகு அவர் தெலுங்கில் கவனம் செலுத்த தொடங்கினார்.

பாக்யராஜ் கண்டெடுத்த முத்து… நடிப்பில் முத்திரை பதித்த கல்லாப்பெட்டி சிங்காரம்…!!

இதனையடுத்து தமிழில் சுமனுக்கு திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் அது ஒரு ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படம் தான். ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுமன் அட்டகாசமான வில்லனாக கலக்கி இருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு இணையாக அவரது நடிப்பு இருக்கும்.

அதன் பிறகு அவருக்கு பல தமிழ் திரைப்படங்கள் வரிசையாக குவிய ஆரம்பித்தது. விஜய்யின் ‘குருவி’, அஜித்தின் ‘ஏகன்’, ஜெயம் ரவி நடித்த ‘எங்கேயும் காதல்’, சுந்தர்.சி நடித்த ‘முரட்டுக்காளை’, கார்த்தி நடித்த ‘அலெக்ஸ் பாண்டியன்’, அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’, விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் கூட அவர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

கவுண்டமணி – செந்தில் காமெடிக்கு காரணமானவர்.. சிவாஜியின் நெருங்கிய நண்பர்.. யார் இந்த ஏ.வீரப்பன்..!

நடிகர் சுமன், ஸ்ரீஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகள் உள்ளார். நடிகர் சுமன் நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டார். கடந்த 1999ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அவர், 5 ஆண்டுகளில் கட்சி மாறினார். 2004ஆம் ஆண்டு அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிலையில் தற்போதும் அதே கட்சியில் தான் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts