தமிழ் சினிமாவின் அப்பா கேரக்டர் நடிகர்.. குணச்சித்திர கேரக்டரில் கலக்கிய ஜெய்கணேஷ்..!

தமிழ் சினிமாவில் அப்பா கேரக்டரில் நடிக்க ஒரு நடிகர் வேண்டுமென்றால் உடனே கூப்பிடு அவரை என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான அப்பா கேரக்டரில் நடித்தவர் தான் நடிகர் ஜெய்கணேஷ். பெரும்பாலான திரைப்படங்களின் நாயகன் மற்றும் நாயகிகளுக்கு அப்பா கேரக்டரில் குணசித்திர நடிப்பில் நடித்து அசத்தியவர் ஜெய்கணேஷ்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற திரைப்படத்தில் சுஜாதா மட்டுமல்ல ஜெய்கணேஷ் அவர்களும் அறிமுகம் ஆனார். தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்ற பாடலில் உருக்கமாக நடித்த அவர் ஆட்டுக்கார அலமேலு என்ற திரைப்படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பார்.

கவுண்டமணி – செந்தில் காமெடிக்கு காரணமானவர்.. சிவாஜியின் நெருங்கிய நண்பர்.. யார் இந்த ஏ.வீரப்பன்..!

பட்டினப்பிரவேசம், சங்கர் சலீம் சைமன், பைலட் பிரேம்நாத், வருவான் வடிவேலன், வணக்கத்துக்குரிய காதலி, கண்ணன் ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட பல படங்களில் அவர் முக்கிய கேரக்டரிலும் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இதன் பிறகு சில திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர கேரக்டரிலும் நடித்துள்ளார்.

குறிப்பாக திரிசூலம், நான் வாழ வைப்பேன், தாயில்லாமல் நானில்லை, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, வா கண்ணா வா, நல்ல நாள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய சின்ன வீடு படத்தில் நாயகி கல்பனாவின் அப்பாவாக அமைதியான கேரக்டரில் நடித்திருப்பார்.

மேலும் எங்க சின்ன ராசா, மனிதன், அன்புள்ள அப்பா, தாய் மேல் ஆணை, தம்பி தங்க கம்பி, ராஜா சின்ன ரோஜா, தென்றல் சுடும் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் அவர் குணசேத்திர கேரக்டரில் தான் நடித்துள்ளார் என்பதும் ஒரு சில படங்களில் மட்டும் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜ் கண்டெடுத்த முத்து… நடிப்பில் முத்திரை பதித்த கல்லாப்பெட்டி சிங்காரம்…!!

சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், அஜித், விஜய் என 3 தலைமுறை நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜெய்கணேஷ், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் ஜெய் கணேஷ்க்கு அடிக்கடி பாக்கு போடும் பழக்கம் இருந்ததாகவும் இதனால் அவர் வாய் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி 54 வயதிலேயே இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அவர் காலமானார். அவரது குடும்பத்தினர் புற்றுநோயிலிருந்து மீட்க எவ்வளவு போராடியும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் தண்ணீர் வாத்தியார் ராமன் ஞாபகம் இருக்கிறதா? இவருக்கு இவ்வளவு பின்னணியா?

54 வயதிலேயே மறைந்தாலும் அவர் நடித்த நூற்றுக்கணக்கான படங்களின் கேரக்டர்கள் இன்னும் ரசிகர்கள் மனதில் நிற்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews