சிவாஜியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போன இடத்தில் அடித்த லக்.. சிவக்குமார் சினிமாவின் மார்கண்டேயனாக மாறியது இப்படித்தான்!

தனக்கு ரசிகர் மன்றமே தேவையில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்து இன்றும் அதைக் கடைப்பிடித்து தனது அறக்கட்டளை மூலம் கல்விச் செல்வத்தை வழங்கி வரும் நடிகர் சிவக்குமார் நடிக்க வந்தது ஒரு சுவாரஸ்ய நிகழ்வு. ஓவியம் வரைவதில் சிவக்குமார்,  சிவாஜியைச் சந்தித்த பின் அவரின் தலையெழுத்தை மாற்றி எழுதினார் நடிகர் திலகம்.

சிவகுமார் சென்னைக்கு வருவதற்கு முன்பு ஊரில் இருந்தபோது, சினிமா நடிகர்களின் உருவங்களை ஓவியமாக வரைந்து சம்பந்தப்பட்ட நடிகர் – நடிகைகளுக்கே அஞ்சலில் அனுப்புவது வழக்கம். ஊரில் இருக்கும்போது, தான் திரையில் ரசித்து மகிழ்ந்த மிகப்பெரிய திரை நட்சத்திரமான சிவாஜி கணேசனை தன்னுடைய 16-வது வயதில் சந்தித்துள்ளார் சிவகுமார். அவரைச் சந்திக்கப் போகும்போது ‘உத்தமபுத்திரன்’ படத்தில் சிவாஜி நடித்த பார்த்திபன், விக்ரமன் என்கிற இரண்டு வேடங்களையும் ஓவியமாக வரைந்து எடுத்துப் போயிருக்கிறார்.

அதை பார்த்து ரசித்த சிவாஜி அந்த ஓவியத்தில் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்ததுடன், “மேற்கொண்டு என்ன செய்யப் போறே?’’ என்று கேட்க, தான் ஓவியக் கல்லூரியில் சேரப் போவதாக சிவகுமார் சொல்லியிருக்கிறார். உடனே சிவாஜி, “அதைவிட உன்னை ஒரு இடத்துக்கு அனுப்பறேன். மோகன் ஆர்ட்ஸ்னு பேரு. அவங்க திரைத்துறையில விளம்பர பேனர், கட்-அவுட்லாம் வரையறவங்க.. நான் சொல்றேன். நீ போய் சேர்ந்துக்க” என்று சொல்லியிருக்கிறார்.

சிவாஜி கூற்றுக்கிணங்க மோகன் ஆர்ட்ஸில் சேர்ந்திருக்கிறார் சிவகுமார். அங்கு பலவகையான தொழில்நுட்பங்களுடன் பெரிய பெரிய கேன்வாஸில் பேனர்கள் வரைவதையும், கட்-அவுட்கள் தயாரிப்பதையும் கண்டு வியந்து, பின் ஓவிய தொழில்நுட்பங்களைப் பயின்றார்.

லேடி சூப்பர் ஸ்டார் ஒதுக்கிய படத்தில் நாயகியாக நடித்து ஓஹோவென புகழ் பெற்ற அனுஷ்கா.. இந்தப் படம்தானா அது..!

ஆனால் ஒரு கட்டத்தில் பேனர் ஆர்ட்டிஸ்ட் ஆவது மிகவும் சிரமம் என்பதையும், கடினமான உழைப்பு தேவைப்படுகின்றன, மிகக் குறைவான ஊதியம் கிடைக்கின்ற தொழில் அது என்பதையும் உணர்ந்த சிவகுமார், 10 மாதப் பயிற்சிக்குப் பிறகு அங்கிருந்து வெளியாகி அதன்பிறகு ஓவிய கல்லூரி சேர்ந்துள்ளார். அதன்பின் இறுதி ஆண்டில் திரைப்படத் துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, வெள்ளித்திரையில் நட்சத்திரமாக உயர்ந்தார்.

தனது முதல் படமான ஏ.வி.எம் தயாரிப்பில் வெளியான காக்கும் கரங்கள் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பின் தனி ஹீரோவாக நடித்தார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி, நாட்டுப்புறப்பாட்டு, கந்தன் கருணை, மறுபக்கம் ஆகிய படங்களில் தன் நடிப்புத் திறனை நிரூபித்தார் இந்த தென்னகத்து மார்கண்டேயன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.