தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சிவா நாராயணமூர்த்தி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவ நாராயணமூர்த்தி இயக்குனர் விசு மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் பூந்தோட்டம். அதன்பிறகு விவேக் மற்றும் வடிவேலு காமெடி காட்சிகளில் இவர் நடித்துள்ளார் என்பதும் ரஜினி, விஜய் அஜித் உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிவ நாராயணமூர்த்தி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று எட்டு முப்பது மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 67. அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சிவ நாராயணமூர்த்தி மறைவுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.