STR-ன்னா ஒண்ணும் சும்மா இல்ல… தந்தையைப் போல நாடி நரம்பெல்லாம் சினிமா இரத்தம் ஊறிய சிம்பு

தான் பிறந்த ஒரு வருடத்திலேயே சினிமாவால் வளர்க்ககப்பட்டவர்தான் சிலம்பரசன். 1984-ம் ஆண்டு தன் தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உறவைக் காத்த கிளி படத்திலேயே ஒரு வயதுக் குழந்தையாக சினிமாவில் அறிமுகமாக இன்று லிட்டில் சூப்பர் ஸ்டாராக சினிமா உலகில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

சிம்புவைப் பற்றி சினிமா உலகில் அனைவரும் சொல்வது இயக்குநர்களின் சுதந்திரத்தில் தலையிடுவார். தான் எதிர்பார்த்தது போன்ற காட்சிகளை வைக்கச் சொல்வார். கதையில் மாற்றங்களைச் சொல்வார் என்பது தான். சினிமாவியே பிறந்து, சினிமா உலகிலேயே வளர்ந்து இன்று அதே சினிமாவில் தன்னை முதன்மையான நடிகராக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் சிம்புவின் வளர்ச்சி இன்று நேற்று தொடங்கியது அல்ல.

தனது தந்தை டி.ராஜேந்தர் எடுக்கும் படங்களைப் பார்த்தும், அதில் நடித்தும், 80களிலேயே குழந்தை நட்சத்திரமாக பஞ்ச் வசனங்கள் பேசியும் தனக்கென தனி முத்திரை கொண்டு சினிமாவால் வளர்க்கப்பட்டவர்.  குழந்தை, சிறுவன், பாலகன், இளைஞர் என்று மனிதரின் அத்தனை பருவங்களிலும் சிம்பு நடிக்காத காலங்களே கிடையாது என்னும் அளவிற்கு சினிமாவின் அத்தனை அங்கத்திலும் இடம்பெற்றவர்.

சிவாஜி கொடுத்த தடபுடல் திருமண விருந்தால் திக்கு முக்காடிய இயக்குநர் ஸ்ரீதர்.. புது மாப்பிள்ளைக்கு கொடுத்த காஸ்ட்லி கிப்ட்

தனது தந்தை டி.ராஜேந்தர் எப்படி கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம், ஒளிப்பதிவு என சினிமாவின் அத்தனை பொறுப்புகளையும் ஏற்று தனது ஸ்டைலில் இன்றும் பேசப்படும் படங்களைக் கொடுத்தாரோ அதேபோல் சிம்புவும் தனது தந்தையால் சினிமாவில் வளர்க்கப்பட்டு சினிமாவின் ஆதி முதல் அந்தம் வர கற்றுத் தெளிந்தவர்.

பள்ளிப் பாடங்களைக் காட்டிலும் அவர் கற்றது சினிமா பாடங்களே அதிகம். இதனால் அவர் நடிக்கும் படங்களில் அவர் தலையீடு இல்லாமல் இருக்காது. ஏனெனில் ஒரு நடிகன் என்பவர் நடிப்பது மட்டும் அவருடைய வேலையை முடித்துக் கொண்டு போய்விடும் வேளையில் ஷாட் வைப்பது முதல், லைட்டிங், பொஷிசன், கேமரா ஆங்கிள் என அனைத்தையும் சிம்பு கற்றுத் தேர்ந்தால்அவர் நடிக்கும் படங்களில் சிறு பிழை இருந்தாலும் கூட அவருக்கு அது உறுத்தும்.

எனவேதான் இயக்குநர்களின் சுதந்திரங்களில் தலையிடுகிறார் என்ற இமேஜ் அவர்மீது விழக் காரணம். இப்படி நாடிநரம்பெல்லாம் சினிமா இரத்தம் ஊறிய சிம்பு இடையில் சில சறுக்கல்களைச் சந்தித்தாலும் ‘வெந்து தணிந்தது காடு‘, பத்து தல என அடுத்தடுத்து தனது ஹீரோயிச படங்களைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Published by
John

Recent Posts