மேல்நாட்டு கதைகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.. ஜாவர் சீதாராமன் உழைப்பில் ஜனரஞ்சக திரைப்படங்கள்..!

தமிழ் திரை உலகில் ராஜா ராணி கதைகள், சமூக பிரச்சனைகள் கொண்ட கதைகள் மட்டுமே வெளியாகி கொண்டிருந்த நிலையில் முதல் முறையாக மேல்நாட்டு பாணியில் துப்பறியும் கதைகள், த்ரில் கதைகளை தமிழ் திரையுலகில் புகுத்தியது ஜாவர் சீதாராமன் தான். வீணை எஸ். பாலச்சந்தர் அவர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் துப்பறியும் கதைகளுக்கு ஜாவர் சீதாராமன் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

நடிகர் ஜாவர் சீதாராமன் திருச்சியை சேர்ந்தவர். அவரது தந்தை பிரபல வழக்கறிஞராக இருந்த நிலையில் தந்தையின் விருப்பப்படி அவர் வழக்கறிஞருக்கு படித்தாலும் சினிமாவில் தான் அவருக்கு ஆசை இருந்தது. இந்த நிலையில் தான் மிஸ் மாலினி என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானார்.

அடுத்ததாக பிரெஞ்சு நாவல் ஒன்றை தமிழில் மொழிபெயர்த்து ஏழை படும் பாடு என்ற தலைப்பில் சுத்தானந்த பாரதியார் என்பவர் தமிழில் மொழி பெயர்த்த நாவலை படமாக்க திட்டமிட்டபோது அதில் உள்ள ஒரு முரட்டு போலீஸ் அதிகாரி வேடத்தில் ஜாவர் சீதாராமன் அறிமுகமானார். அந்த கேரக்டரின் பெயர் தான் ஜாவர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவரது பெயரில் ஜாவர் என ஒட்டி கொண்டு ஜாவர் சீதாராமன் என மாறியது.

குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் பணம்.. இப்போது கூலி வேலை.. நடிகர் ஹாஜா ஷெரிப்பின் கதை..!!

வீணை எஸ் பாலச்சந்தர் கைதி என்ற திரைப்படத்தை இயக்கிய போது கதை விவாதத்திற்கு ஜாவர் சீதாராமனை அவர் தயாரிப்பாளரிடம் அழைத்து சென்றார். ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் ஜாவர் சீதாராமன் விவரித்த கதையை பார்த்து ஆச்சரியமடைந்து, அவரை நம்பி அந்த படத்தை ஒப்படைத்தார்.

ஏவிஎம் தயாரித்த அந்த நாள் என்ற படத்தின் திரைக்கதை வசனத்தையும் ஜாவர் சீதாராமன் எழுதினார். வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அவர் துப்பறியும் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருப்பார். அந்த நாள் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் எதிரி நாட்டிற்கு உளவு சொல்லும் வில்லனாக நடித்திருந்த நிலையில் அவரை அவரது மனைவியே சுட்டுக் கொல்வது போன்ற கதையம்சம் இருக்கும்.

இந்த படத்தின் ஆரம்பத்திலேயே சிவாஜி கணேசன் சுடப்பட்டு கொல்லப்படுவார். அதன் பிறகு பிளாஷ்பேக்கில் ஒவ்வொரு ரகசியமும் வெளியாகும் வகையில் திரைக்கதையை வித்தியாசமாக அமைத்து இருப்பார். இந்த படத்தின் திரைக்கதை பலருக்கு புரியாததால் இந்த படம் தோல்வி அடைந்தது. ஆனால் இன்று இந்த படத்தை பார்க்கும்போது அந்த காலத்திலேயே இப்படி ஒரு திரைக்கதை எழுதியவரா ஜாவர் சீதாராமன் என்று ஆச்சரியப்படும் வகையில் இருக்கும்.

நடிகர் பாக்யராஜின் காதலுக்கு உதவிய வடிவுக்கரசி! நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!

அதேபோல் களத்தூர் கண்ணம்மா, குழந்தையும் தெய்வமும், ராமு உள்பட ஒரு சில படங்களுக்கு ஜாவா சீதாராமன் திரைக்கதை வசனம் எழுதினார். அந்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படங்கள் தமிழில் மட்டும் இன்றி ஹிந்தியிலும்  படமாக்கப்பட்டன. இதனை அடுத்து தான் அவருக்கு ஹிந்தியிலும் சில படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுத வாய்ப்பு வந்தது.

குறிப்பாக ஹிந்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ராஜேந்திர கிருஷ்ணன் என்பவர் ஜாவர் சீதாராமனை ஹிந்திக்கு அழைத்துச் சென்று தனது படத்திற்கு வசனம் எழுத வைத்தார். அதன் பிறகு ஹிந்தியில் சில படங்களுக்கு அவர் வசனம் எழுதினார். அதேபோல் பிஎஸ் வீரப்பா ஜாவா சீதாராமனின் நெருங்கிய நண்பர். அவர் தயாரித்து ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, ஆனந்த ஜோதி போன்ற படங்களுக்கு ஜாவர் சீதாராமன் தான் திரைக்கதை வசனம் எழுதினார்.

இந்த நிலையில் வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஆங்கில நகைச்சுவை படமான பிராஸ் பாட்டில் என்ற படத்தை தமிழில் படமாக்க விரும்பினர். இதில் சில கற்பனை கதாபாத்திரத்தையும் புகுத்தி பட்டணத்தில் பூதம் என்ற கற்பனை கதையை சீதாராமன் உருவாக்கினார். அந்த படம் மிகப்பெரிய வசூலை பெற்றது. ஜாவர் சீதாராமன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதால் அவரை தங்களது பத்திரிகைகளில் எழுத பல பத்திரிகைகள் அழைப்பு விடுத்தன.

குமுதம் பத்திரிகையில் அவர் எழுதிய மின்னல் மழை, மோகினி, உடல் பொருள் ஆனந்தி, பணம் பெண் பாசம், நானே நான் போன்ற தொடக்கதைகள் அன்றைய வாசகர்களால் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சீதாராமன் ஒரு திரைப்படத்தை இயக்க விரும்பினார். அதுவும் ஹிந்தியில் அவர் இயக்க திட்டமிட்டார். தமிழில் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான பணமா பாசமா என்ற படத்தை ஹிந்தியில் அவர் இயக்கினார். இந்த படத்தின் சென்சார் முடிந்த தினத்தன்று சீதாராமன் உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பின்னரே அந்த படம் வெளியானது.

நடிகர் அஜித்துக்கு மட்டும் இத்தனை பட்ட பெயரா.. இவளோ நாள் இது தெரியாம போச்சே!

தமிழ் திரை உலகில் ஆங்கில பாணி படங்களை முதல் முதலில் புகுத்தியது ஜாவர் சீதாராமன். தமிழ் திரையுலகம் உள்ள வரை அவரது திரைக்கதை வசனம் ரசிகர்கள் மனதில் குடியிருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...