திருடன், பிச்சைக்காரன் வேடமா?.. அவரை கூப்பிடுங்க முதல்ல.. 2 மாஸ்டர் டிகிரி முடித்த பிரபல நடிகர்..

சமீப காலமாக எந்த திரைப்படங்கள் வெளியானாலும் அந்த படத்தை பற்றி பலரும் விமர்சனம் செய்வார்கள். அந்த வகையில், திரைப்படங்கள் நிறைய நடித்துள்ள சத்யந்திரா, தனது சினிமா விமர்சனம் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகியும் உள்ளார். இவர் பல படங்களில் திருடன், பிக்பாக்கெட், பிச்சைக்காரன் போன்ற கேரக்டரில் நடித்தவர். ஆனால் உண்மையில் ஒரு காவல்துறை அதிகாரியின் மகன் என்பதுடன் மட்டுமில்லாமல், இரண்டு மாஸ்டர் டிகிரி படித்துள்ளவர் என்பதும் கூடுதல் தகவல்.

பெங்களூரை  சேர்ந்த சத்யேந்திராவின் அப்பா பிரிட்டிஷ் காலத்தில்  காவல்துறை அதிகாரியாக இருந்தவர். சிறுவயதில் அவர் பெங்களூரில் தான் படித்து வளர்ந்தார். பள்ளிப்படிப்பை அடுத்து அவர் கல்லூரியில் கன்னட இலக்கியம் மற்றும் பிலாசபி ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் இவரது கவனம் திரைப்படங்களில் நடிப்பதில் சென்றது. முதலில் சில கன்னட படங்கள் நடித்த அவர் அதன் பின்னர் தமிழ் திரைப்படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி திடீரென அவர் அமெரிக்கா சென்று அங்கும் சில ஆண்டுகள் பணிபுரித்ததாகவும் கூறப்பட்டது. மேலும் ஜெர்மனியிலும் சில காலம் பணிபுரிந்துள்ளார்.

இந்த நிலையில் ரகுவரன் நடித்த ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் தான் அவர் தமிழில் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து அவர் மண்வாசனை திரைப்படத்தில் தெருப்பாடகனாக நடித்திருப்பார். அந்த படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்ததை அடுத்து கமல்ஹாசன் நடித்த சத்யா திரைப்படத்தில் பிக் பாக்கெட் வேடம் கிடைத்தது. அதனை அடுத்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு திரைப்படத்தில் திருடன் வேடம் கிடைத்தது.  இந்த படத்தில் இவர் நடித்த காட்சி கலகலப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

sathyendra

அதன் பின்னர் ஒரு ‘புல்லாங்குழல் அடுப்பு  ஊதுகிறது’ என்ற திரைப்படத்தில் அவர் கிட்டத்தட்ட ஹீரோவாக நடித்திருப்பார். மேலும் தேசிய விருது பெற்ற பிரதாப் போத்தன் இயக்கத்தில் உருவான மீண்டும் ஒரு காதல் கதை என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சத்யேந்திரா நடித்திருப்பார். பாட்டுக்கு ஒரு தலைவன், சொல்லாமலே போன்ற படங்களில் நடித்த அவர் விஜய், சிம்ரன் நடித்த பிரியமானவளே என்ற திரைப்படத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருப்பார்.  இவரது கேரக்டருக்கு பின்னர் தான் கணவன் மனைவி உறவு என்றால் என்ன என்பதை விஜய் புரிந்து கொள்ளும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கும்.

அதேபோல் விசில் திரைப்படத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஒரு நபராக நடித்திருப்பார். மேலும் அவர் பல குறும்படங்கள் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக பைரவி, ஆனந்தம், அரசி, அம்மு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.  நடிகன் சத்தியந்திரா அவர்களுக்கு  தற்போது 80 வயதுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் அவர் கிட்டத்தட்ட நடிப்புலகில் இருந்து விலகி விட்டார் என்று சொல்லலாம்.

நடிகர் சாத்தியந்திரா திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் ஆனால் தனக்கு 60க்கும் மேற்பட்ட பெண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். பெண்களுடன் பழகியதை காதல் என்று நான் சொல்ல மாட்டேன் என்றும் அவர்களுடன் சில நாட்கள் இருந்தேன் என்று மட்டும் சொல்வேன் என்றும் அதற்கு பெயர் லவ் அல்ல என்றும் பேட்டியில் கூறியுள்ளார். பெண்களுடன் பழகுவேன், காபி குடிப்பேன், லஞ்ச் சாப்பிடுவேன், சில நாட்கள் தங்கி இருப்பேன் அவ்வளவுதான், எனக்கு திருமணத்தின் மீது எந்த விதமான அக்கறையும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இதே போல திரைப்படம் ரிலீசான தினத்தில் அவர் பேசும் விமர்சன வீடியோக்களும், அதிக வைரலான சூழலில், அவர் பெரிய ஹீரோக்கள் பற்றி சொல்லும் கருத்துக்கள், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்புகளை சம்பாதித்திருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...