நள்ளிரவில் முற்றிய மோதல்.. அதன்பின் ஆரம்பித்த நட்பு.. சரத்குமார்-கே.எஸ்.ரவிக்குமார் நண்பர்களான சுவாரஸ்ய பின்னணி

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உதவி இயக்குநராக விக்ரமனிடம் பணிபுரிந்து பின் தனியாக முதன்முதலாக புரியாத புதிர் என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். ரகுவரன், சரத்குமார்,ரகுமான், ஆனந்த் பாபு, ரேகா, சித்தாரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். வழக்கமாக குடும்பப் படங்கள் மற்றும் கமர்ஷியல் கதைகளை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் தனது முதல்படத்தை கிரைம் த்ரில்லராகக் கொடுத்தார்.

முதல் படமே கே.எஸ்.ரவிக்குமாருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தைத் தயாரித்தார். ரகுவரனின் புகழ் பெற்ற வசனமான I Know.. I Know.. இப்படத்தில்தான் இடம்பெற்றது. அதுவரை ஹீரோவாக, குணச்சித்திர வேடங்களில் நடித்த ரகுவரன் இப்படத்தின் மூலம் வில்லனாக நடித்து பின் தமிழ் சினிமாவில் நம்பியாருக்குப் பிறகு ஹீரோக்களை மிரட்டும் வில்லனாக மாறினார்.

ஒவ்வொரு பொங்கலுக்கும் இதை மட்டும் தவறாமல் செய்யும் எம்.ஜி.ஆர்.. அப்படி ஒரு பற்றா?

மேலும் சரத்குமாருக்கும் இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருப்பார். அதன்படி, ஒரு சண்டைக் காட்சிக்காக இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சரத்குமார் அப்போது வேறு படத்தில் பிஸியாக இருந்ததால் சொன்னபடி நேரத்தில் வர இயலவில்லை. அப்போது கே.எஸ்.ரவிக்குமார் அந்த சண்டைக் காட்சிகளை டூப் நடிகரை வைத்து படமாக்கி விட்டார்.

காலதாமதமாக வந்த சரத்குமார் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு கே.எஸ்.ரவிக்குமாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முடிந்து பின் மீண்டும் இருவரும் ஒரே காரில் பயணித்துள்ளனர். அப்போது முதல் இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ ஆரம்பித்தனர்.

அதன்பின் கே.எஸ்.ரவிக்குமார் தனது ஆஸ்தான ஹீரோவாக்கினார். இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து வந்த படங்கள் சேரன் பாண்டியன், நாட்டாமை, மாயி, பாட்டாளி, ஊர் மரியாதை, பாறை, பேண்டு வாத்தியம், நட்புக்காக, சமுத்திரம், ஜக்குபாய் போன்ற பல படங்களை இந்தக் கூட்டணி கொடுத்துள்ளது. இதில் நட்டாமை, சேரன் பாண்டியன், நட்புக்காக போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றவை.

இவ்வாறு மோதலில் ஆரம்பித்த இவர்கள் நட்பு, காலப்போக்கில் பல படங்களில் இணைந்து பணியாற்றி பின் தற்போது சிறந்த நண்பர்களாக இருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews