கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தாலும்.. நூலிழையில் உயிர் தப்பிய ராமராஜன்.. யாரிடமும் சொல்லாத ரகசியம்

தமிழ்த்திரையுலகில் எம்.ஜி.ஆர்-சிவாஜிக்கு அடுத்த படியாக இரண்டு துருவங்களாக விளங்கியவர்கள் ரஜினி- கமல். 1980களின் பிற்பகுதியில் இவர்களது ராஜ்ஜியம்தான் கொடிகட்டிப் பறந்தது. அதிக பட்ஜெட், பிரம்மாண்ட படங்கள் என வரிசையாக ஹிட் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கு மத்தியில் சப்தமே இல்லாமல் தொடர்ந்து ஒரு 5,6 வருடம் நடித்து தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட நடிகர் தான் ராமராஜன்.

மதுரையில் தியேட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னாளில் அந்த தியேட்டரையே விலைக்கு வாங்கும் அளவிற்கு உயர்ந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவரின் வளர்ச்சியை. இயக்குநர் ராம.நாராயணனிடம் உதவியாளராகப் பணியாற்றி சில படங்களை இயக்கிய ராமராஜனுக்கு அவை மண்ணைக் கவ்வ, ஹீரோவாக அரிதாரம் பூசினார்.

தமிழ் சினிமா இவரைக் கை விடவில்லை. இயக்குநராக தோல்வி கண்டவர் ஹீரோவாக ஜொலித்தார். எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், ஊருவிட்டு ஊருவந்து என வரிசையாக பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுக்க ரஜினி, கமல் உள்ளிட்டோரே ஒரு கனம் ஆடிப் போயினர்.

கோடிகளில் புரளும் ஸ்ரேயா கோஷல்.. ஒரு பாட்டுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? மிரள வைக்கும் சொத்து மதிப்பு
பின்னர் 90களுக்குப் பிறகு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. மேலும் அரசியல் பக்கம் தாவி அதிமுகவில் இணைந்து எம்.பி. ஆனார். மேலும் நடிகை நளினியைக் காதல் திருமணம் முடித்து பின் விவாகரத்துப் பெற்றார். இப்படி சினிமாவில் உச்சத்தையும், இறக்கத்தையும் பார்த்த ராமராஜன் விபத்து ஒன்றில் சிக்கி நிலை குலைந்தார். அந்த விபத்தில் இவரின் கார் ஓட்டுனர் உயிரிழக்க இவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஆனால் இந்த விபத்து நடப்பதற்கு முன்பே ஊருவிட்டு ஊரு வந்து படப்பிடிப்புத் தளத்தில் ஒருமுறை உயிர் தப்பியிருக்கிறார் ராமராஜன். கங்கை அமரன் இயக்கத்தில் 1990-ல் வெளிவந்த ஊருவிட்டு ஊருவந்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் இளையராஜாவின் இசையில் பாடல்களும் மண் வாசனை வீசியது. இந்தப் படத்தின் ஷுட்டிங்கிற்காக படக்குழுவினருடன் தாய்லாந்து சென்றிருக்கின்றனர். அங்குள்ள பட்டயா கடற்கரையில் ஓர் சண்டைக்காட்சி படமாக்கப்பட இருந்தது. காட்சிப்படி பாராசூட்டில் சென்று சண்டையிட வேண்டும். போட் சென்றால் மட்டுமே பாராசூட்டில் பறக்க முடியும்.

முதலில் ஒருமுறை சண்டைக் கலைஞர்கள் ஒத்திகை பார்த்தனர். அதன்பின்னர் ராமராஜன் அந்தக் காட்சியில் பாராசூட்டில் சென்று கொண்டே வில்லன்களுடன் சண்டையிட வேண்டும். அப்படி அவர் செல்லும் போது திடீரென பாராசூட் அறுந்து விழுக படக்குழு அதிர்ச்சி அடைந்தது. அறுந்த பாராசூட் ராமராஜன் மேல் விழுந்திருந்தால் விபரீதம் ஆகியிருக்கும். ஆனால் நல்ல வேளையாக அவ்வாறு நடக்கவில்லை. பாராசூட் வேறுபக்கமாக விழுந்தது. மேலும் அவரும் கடலுக்குள் விழுந்து தத்தளிக்க உடனடியாக துரிதமாகச் செயல்பட்டு அவரை மீட்டு காப்பாற்றினர் படக்குழுவினர். இப்படி தனக்கு படப்பிடிப்பில் நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார் நடிகர் ராமராஜன்.

Published by
John

Recent Posts