கோடிகளில் புரளும் ஸ்ரேயா கோஷல்.. ஒரு பாட்டுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? மிரள வைக்கும் சொத்து மதிப்பு

ற்போதைய சூழலில் இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்தான் பிரபல பின்னனிப் பாடகி ஸ்ரேயா கோஷல். தாகூரை கொடுத்த வங்கத்து மண் தான் ஸ்ரேயா கோஷலையும் இசை உலகிற்கு வழங்கியது. ரவீந்திரநாத் தாகூர் கவிதை புனைவதில் மன்னன் என்றால் ஸ்ரேயா கோஷலோ பாடல்களைப் பாடி மகிழ்விப்பதில் ராணியாக வலம் வருகிறார்.

இளம் வயதிலேயே முறைப்படி சங்கீதம் பயின்று மேடைகளில் பாடியுள்ளார். இவரது திறமையை அறிந்த பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியும், இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பாரும் அவருக்கு 2002-ல் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான தேவதாஸ் படம் மூலம் முதன் முதலாக பின்னனி பாடும் வாய்ப்பினை வழங்கினார்கள்.

முதல் படத்திலேயே தனது அபார குரல் வளத்தால் முத்திரை பதித்த ஸ்ரேயா கோஷல் தொடர்ந்து இந்தியில் பாட ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து தமிழிலும் வாய்ப்புகள் வரவே சில்லுனு ஒரு காதல் படத்தில் முன்பே வா பாடல் மூலம் பிரபலமானார். இவ்வாறு தொடர்ந்து பல மொழிகளில் பாடி இந்திய மொழிகளில் நம்.1 பாடகி ஆனார்.

மேலும் இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் பிரபலமாகவே மளமளவென இவரின் சம்பளமும் உயர்ந்தது. மேலும்விருதுகளும் குவிய ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் இவர் விருது வாங்காத ஆண்டே இல்லை என்னும் அளவிற்கு புகழின் உச்சியில் சென்றார் ஸ்ரேயா கோஷல், மொழிகள் கடந்து உலகம் முழுவதும் ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள்.

இப்படி இன்றளவும் பின்னனிப் பாடகியாகவும், தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி நடுவராகவும், ஆல்பங்கள் வெளியிட்டும் தனது அபார குரல் வளத்தால் உலக அளவில் புகழ்பெற்ற பாடகியாகத் திகழும் ஸ்ரேயா கோஷலின் சொத்து மதிப்பு மிரள வைக்கிறது.

ரீ-ரிலீஸ்-ல் கில்லிக்கு போட்டியாக வரப்போகும் அஜீத் படம்.. தல பிறந்தநாளில் காத்திருக்கும் தரமான சம்பவம்

மெலடி குயின் ஸ்ரேயா கோஷலன் இன்றைய தேதியில் அவரின் சொத்து மதிப்பு சுமார் 240 கோடியைத் தாண்டுகிறது. மேலும் ஒரு பாடலுக்கு அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சுமார் 25 லட்சம் ஆகும். மேலும் பாலிவுட்டில் பல இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஸ்ரேயா கோஷல் ஒரு எபிசோடுக்கு சுமார் 3 முதல் 8 லட்சம் வரை ஊதியம் பெறுகிறார். மேலும் மும்பை மற்றும் கொல்கத்தாவில் சொகுசு பங்களாக்களையும் வைத்திருக்கிறார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்ஸ்டாகிராமில் 29.3 மில்லியன் பாலோயர்களயும், எக்ஸ் தளத்தில் 7 மில்லியன் பாலோயர்களையும் கொண்டுள்ளார். இதன் மூலம் தனி வருமானம் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி கோக், NIVEA, ஜாய் ஆலுக்காஸ், Pampers போன்ற நிறுவனங்களின் பிராண்டட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 2 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார். Benz, Rangeover, BMW போன்ற உயர்ரக கார்களையும் வைத்திருக்கிறார் ஸ்ரேயா கோஷல். மேலும் இதர சொத்துக்களின் மதிப்பு ரூ.2 கோடியைத் தாண்டுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...