19ஆம் நூற்றாண்டில் பிறந்து 20ஆம் நூற்றாண்டில் பெயர் எடுத்த நடிகர்.. எம்ஜிஆர், சிவாஜிக்கே நடிப்புல போட்டி கொடுத்தவரு..

தமிழ் திரை உலகில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து 20 ஆம் நூற்றாண்டில் பல காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவர் நடிகர் பிடி சம்பந்தம். புதுக்கோட்டை சேர்ந்த இவர் 8 வயதிலேயே நாடகத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். நாடக உலகின் தந்தை என்று போற்றப்பட்ட பம்மல் சம்பந்த முதலியார் அவர்களாலே பாராட்டு பெற்ற இவர் குழந்தை நட்சத்திரம் முதல் பெரிய கேரக்டர் வரை நடித்து புகழ் பெற்றார்.

கடந்த 1899 ஆம் ஆண்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த பிடி சம்பந்தம், சிறு வயதிலேயே நாடகம், நடிப்பு என தனது பாதையை ஏற்படுத்திக் கொண்டதால் கல்வி பயிலும் ஆசையே இவருக்கு இல்லாமல் போய்விட்டது. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த துறையில் அவர் மிகப்பெரிய முறையில் சிறந்தவராக விளங்கினார்.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பிடி சம்பந்தம், ஏவிஎம் தயாரித்த வாழ்க்கை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 1949 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் ஜீவிதம், பெண், அந்த நாள், கோமதியின் காதலன், கதாநாயகி டவுன் பஸ், செல்ல பிள்ளை, உள்பட பல படங்களில் நடித்தார்.

சிவாஜி கணேசன் வில்லனாக நடித்த அந்த நாள் திரைப்படத்தின் முதல் காட்சியில் துப்பாக்கி சூடும் காட்சியில் பிடி சம்பந்தம் நடித்திருப்பார். அதேபோல் பெண் வேடமிட்டு சந்திரபாபு சைட் அடிக்கும் சூப்பர் கேரக்டரில் ஆடிப்பெருக்கு என்ற படத்தில் நடித்திருப்பார். அதேபோல் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நாகேஷ் வேடமிட்டு நடித்த அதே கண்கள் திரைப்படத்தில் பிடி சம்பந்தம் அவரை பெண் என நினைத்து விரட்டி விரட்டி காதலிக்கும் கேரக்டரில் நடித்திருப்பார்.

பெண் வேடமிட்டு பி எஸ் வீரப்பாவை ஏமாற்றும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். குமுதம் என்ற திரைப்படத்தில் எம் ஆர் ராதாவின் அப்பாவாக நடித்த பிடி சம்பந்தம், தந்தையை அவமதிக்கும் போதெல்லாம் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்ட அவர் நடித்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

பிடி சம்பந்தம் அவர்களுக்கு 1960 களில் ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக அடுத்த வீட்டுப் பெண், கைராசி, குமுதம், ஆடிப்பெருக்கு, யாருக்கு சொந்தம், காட்டு ராஜா போன்ற படங்களில் நடித்தார். காட்டு ராஜா படத்தில் அவர் சண்முகம் முதலியார் என்ற கேரக்டரில் கலக்கி இருப்பார். அதேபோல் அன்பு கரங்கள் திரைப்படத்தில் ஒரு துறவியாகவும், திருவிளையாடல் படத்தில் டி எஸ் பாலையாவின் குரூப்பில் ஒருவராகவும் நடித்திருப்பார்.

எம்ஜிஆர் நடித்த அன்பே வா என்ற திரைப்படத்தில் வேலைக்காரராக ஒரு சிறு கேரக்டரில் பிடி சம்பந்தம் நடித்தார். அதே கண்கள், திருவருட்செல்வர், திருமால் பெருமை, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் இவரது கேரக்டர் சூப்பராக இருக்கும். மேலும் சிவாஜி கணேசன் நடிப்பில் ஏபி நாகராஜன் இயக்கத்தில் உருவான குரு தட்சணை என்ற திரைப்படத்தில் ஜிஎம் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அதன் பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என தெரிகிறது.

பிடி சம்பந்தம் அவர்களின் திரையுலக சேவையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது அளித்தது. மேலும் அவர் சில விருதுகளை அவர் வென்றுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் என அந்த காலத்து முன்னணி நடிகர் அனைவரிடமும் நடித்த பிடி சம்பந்தம் 1969 ஆம் ஆண்டிற்கு பின் நடிப்பை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் 1982 ஆம் ஆண்டு அவர் காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழ் திரை உலகமே நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...