FDFS -ல் காத்திருந்த ஷாக்.. GOOD NIGHT படத்தில் மணிகண்டனுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சி அனுபவம்

வித்தியாசமான கதைக் களங்களைக் கொண்டு ஹீரோயிசம் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களில் அடுத்த விஜய் சேதுபதியாகக் கலக்கி வருகிறார் நடிகர் மணிகண்டன். திரைக்கதை எழுத்தாளராக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த மணிகண்டன் விஜய் ஆண்டனி நடித்த இந்தியா-பாகிஸ்தான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் அதன்பின் பா.ரஞ்சித் இயக்கிய காலா படத்தின் மூலம் ரஜினியின் மகனாக நடித்து கவனிக்க வைத்தார்.

தொடர்ந்து இவருக்கு நல்ல புகழைக் கொடுத்த படம் ஜெய்பீம் தான். அந்தப் படத்தில் ராசாக் கண்ணுவாக நடித்து புகழ் பெற்றார். இந்தப்படத்தில் சிறந்த நடிப்பிற்காக பல்வேறு அமைப்பின் விருதுகளையும் பெற்றுள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய இவரின் சினிமா வாழ்க்கை தற்போது உச்சத்தில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2023 ஆண்டு வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில் ‘குட் நைட்‘ படமும் ஒன்று. இந்தப் படத்தில் மணிகண்டன் மோட்டார் மோகனாக குறட்டை விடும் பழக்கம் உள்ள இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இந்தப் படம் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்நிலையில் குட் நைட் படத்தின் ரிலீஸ் தேதி அன்று முதல் நாள் காட்சிக்காக ரசிகர்களுடன் படம் பார்க்கச் சென்றிருக்கின்றனர் ஹீரோ மணிகண்டனும், ஹீரோயின் மீத்தா மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர். சென்னை போரூரில் உள்ள ஜி.கே. தியேட்டரில் படம் பார்க்கச் சென்றிருக்கின்றனர்.

படத்தின் முதல் காட்சி காலை 9.00 மணி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தியேட்டர் பார்க்கிங்கில் சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அங்கு 2,3 பைக்குகள் தவிர அனைத்து இடங்களும் காலியாக இருந்தது. மணிகண்டனுக்கு உள்ளுக்கள் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இன்னும் 15 நிமிடங்கள்தான் உள்ளது. படம் அவ்வளவுதானா என்று குழப்பத்திலும், சோகத்திலும் ஆழ்ந்து கொண்டே தியேட்டரினுள் சென்றிருக்கிறார்.

பாடலில் எழுந்த சந்தேகம்.. டியூனுக்கு வரி கிடைக்காத நிலையில் பாடலாசிரியராக மாறிய இசைஞானி..

தியேட்டர் அதிபர் இவர்களை வரவேற்று உபசரித்து பின்னர் படம் ஆரம்பிக்கும் தருவாயில் இவர்களை அழைத்துச் செல்லும்போது மணிகண்டன் மீண்டும் அதே பார்க்கிங்கை பார்த்திருக்கிறார். இப்போது பார்க்கிங் நிரம்பியிருக்கிறது. நம் படத்திற்கு அல்ல வேறு படத்திற்கு வந்த கூட்டமாக இருக்கும் என்று எண்ணி தியேட்டரினுள் நுழைந்தவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தியேட்டர் சீட்கள் அனைத்தும் நிரம்பியிருக்க அப்புறம் தான் அவருக்கே உயிரே வந்திருக்கிறது.

தொடர்ந்து படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து நல்ல விமர்சனங்களைச் சொல்ல, அதே வேளையில் மற்ற தியேட்டர்களின் நிலவரத்தையும் கேட்ட மணிகண்டன் படம் ஹிட் என்று சொன்னதும் தான் நிம்மதிப் பெருமுச்சே விட்டிருக்கிறார். குட் நைட் படம் மணிகண்டனுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்த நிலையில் சமீபத்தில் நடித்த லவ்வர் படமும் இவருக்கு வெற்றியைக் கொடுக்க அடுத்தடுத்து இயக்குநர்களின் பார்வை மணிகண்டன் பக்கம் திரும்பியிருக்கிறது.

Published by
John

Recent Posts