நடிகர் இயக்குனர் தியாகராஜனின் பிறந்த நாள் இன்று

மலையூர் மம்பட்டியான் என்ற படத்தின் பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாமல் இருக்காது . மலையூர் மம்பட்டியான் என்ற உண்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் கதையில் திரைப்படத்தில் வாழ்ந்தவர் நடிகர் தியாகராஜன்.

225e126e34aaa1e153a75a14473cc5f2

சிறப்பான நடிப்புத்திறனை பல படங்களில் வெளிப்படுத்தியவர் இவர். மலையூர் மம்பட்டியான் மட்டும் இன்றி தீச்சட்டி கோவிந்தன் என்ற போலீஸ் அதிகாரியின் உண்மை கதையிலும் நடித்து சிறப்பு சேர்த்துள்ளார் இவர். பூவுக்குள் பூகம்பம், சேலம் விஷ்ணு, கொம்பேறி மூக்கன் உள்ளிட்ட இவரின் படங்கள் பல ரசிகர்களுக்கு மறக்காது. சில படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார். சமீப கால படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்

முன்னணி நடிகர் பிரசாந்தின் அப்பாவான இவர் நடிகர் பிரசாந்த் நடித்த சில படங்களை இயக்கியுள்ளார் அதில் இவர் இயக்கிய ஆணழகன் திரைப்படம் பிரசாந்துக்கும் இவருக்கும் நல்லதொரு வெற்றியை கொடுத்தது.

கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகிக்கு முன்பே சிறப்பான பெண் வேடமிட்டு பிரசாந்த் இப்படத்தில் நடித்து இருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews