வில்லனா நடிச்சு பேர் வாங்குன பிரபலம்.. அஜித் படமும் சேர்த்து இத்தனை படம் டைரக்ட்டும் பண்ணி இருக்காரா..

தமிழ் திரைப்படங்களில் நாம் பார்க்கும் பல குணச்சித்திர நடிகர்கள் அதை தவிர வேறு சில துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஆனால், நாம் அவர் நடிகர் என்று மட்டும் நினைத்து கடந்து சென்று விடுவோம். உதாரணத்திற்கு மனோபாலா, சிங்கம் புலி, ரவி மரியா உள்ளிட்ட பலரும் நடிகர்களாக இருந்தாலும், அவர்கள் ஏராளமான திரைப்படங்களை இயக்கி உள்ள இயக்குனர்களும் கூட. அந்த வகையில் முக்கியமான ஒருவர் தான் ராஜ்கபூர்.

பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் உதவியாளராக இருந்த ராஜ்கபூர் அதன் பிறகு ’தாலாட்டு கேட்குதம்மா’ என்ற படத்தில் மூலம் இயக்குனரானார். பிரபு மற்றும் கனகா நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சின்ன பசங்க நாங்க, உத்தமராசா, சின்ன ஜமீன், சீமான், வள்ளல், போன்ற படங்களை இயக்கினார்.

அஜித், சிம்ரன் நடித்த ’அவள் வருவாளா’ என்ற திரைப்படம் இவரது இயக்கத்தில் உருவானது தான். கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஒரு சில படங்களை இயக்கி வந்த ராஜ்கபூர், சத்யராஜ் நடித்த வம்பு சண்டை என்ற திரைப்படத்தை இயக்கிய பின்னர் வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை.rajkapoor1

திரைப்படங்களில் மட்டுமின்றி அவர் சீரியல்களையும் இயக்கி உள்ளார். குறிப்பாக நந்தினி, ராசாத்தி, ஜோதி ஆகிய சீரியல்களை இயக்கி உள்ளார். அதுமட்டுமின்றி ஏராளமான படங்களில் அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்துள்ளார். அதன் மூலம் தான் அவர் மீது அதிக பிரபல வெளிச்சம் பட்டிருந்தது.

’ஒரு ஓடை நதியாகிறது’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகரான அவர் அதன் பின்னர் அறுவடை நாள், தலைமுறை,  ஆண்டான் அடிமை, விசில், தென்னவன், வின்னர், தம்பி, ஆறு, தர்மபுரி, வேல் , பழனி, வில்லு, மாசிலாமணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ராஜ் கபூரின் மகன் மெக்காவில் இருந்த போது அவரது 23 ஆம் வயதில் மறைந்தது அந்த குடும்பத்தையே சுக்கு நூறாக உடைத்திருந்தது. இதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த ராஜ் கபூர், தொடர்ந்து திரைபடடங்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வந்தார்.

கடந்த ஆண்டு கூட அவர் மெய்ப்பட செய், அழகிய கண்ணே போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தாலாட்டு, எங்க வீட்டு மீனாட்சி, ரோஜா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். பன்முக கலைஞர் ராஜ்கபூர் இன்னும் பல  வருடங்கள் தனது திறமையை ரசிகர்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டும் என்பதே அனைவரது ஆசை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.