இன்றும் தமிழ் சினிமா கொண்டாடும் படத்தை இயக்கியவர்.. சிவாஜி, எம்ஜிஆருக்கு பல ஹிட் கொடுத்த பிஆர் பந்தலு!

சிவாஜி கணேசன் நடித்த ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ ’பலே பாண்டியா’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பி.ஆர். பந்தலு . இவரை இயக்குனராக மட்டும் தான் பலருக்கு தெரியும். ஆனால் இயக்கம் தவிர சினிமாவில் வேறு துறைகளிலும் பணிபுரிந்து தனக்கான முத்திரையையும் தமிழ் சினிமாவில் பதித்துள்ளார்.

பி ஆர் பந்தலு முதலில் நடிகராக தான் திரை உலகில் அறிமுகமானார்.  முதலில் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த அவர் லாவாங்கி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். 1946 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வெற்றி பெற்றது. அடுத்து  நாம் இருவர் என்ற படத்தில் நடித்தார். ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் டி ஆர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதன் பிறகு அவர் 1954ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த ’கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். மேலும் இந்த படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிஆர் பந்தலு, சிவாஜிகணேசன் நடித்த தங்கமலை ரகசியம் என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். இந்த படத்தை அவர் தயாரித்த அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

br bandhalu2

இதன் பிறகு அவர் சபாஷ் மீனா, ஸ்கூல் மாஸ்டர் உள்ளிட்ட படங்களை நடித்து, இயக்கி தயாரித்தார்.  பி ஆர் பந்தலு இயக்கத்தில் உருவான மிகப்பெரிய வெற்றி படம் என்றால் அது ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ தான். இந்த படத்தையும் அவரே தயாரித்ததுடன் ஒரு சிறு கேரக்டரிலும் நடித்திருப்பார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வெற்றியை அடுத்து அவர் அந்த படத்தை தெலுங்கிலும் இயக்கினார். இதனை அடுத்து ’குழந்தைகள் கண்ட குடியரசு’ என்ற தமிழ் படத்தை இயக்கிய அவர் அதன் பிறகு பல திரைப்படங்களை இயக்கினார். பெரும்பாலும் இவர் இயக்கிய திரைப்படத்தில் அவர் ஒரு கேரக்டரை ஏற்றுக் கொள்வார் என்பதும் பெரும்பாலும் அவர் இயக்கும் படங்களை அவரே தயாரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த ’பலே பாண்டியா’ என்ற திரைப்படம் இவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவானது தான். அதன்பின்னர் முரடன் முத்து, ஆயிரத்தில் ஒருவன், நாடோடி,  ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை ஆகியவை இவரது இயக்கத்தில் உருவான மிகப்பெரிய வெற்றி படங்களாகும்.

கடந்த 1974 ஆம் ஆண்டு கடவுள் மாமா என்ற படத்தை தயாரித்து இயக்கி ஒரு சிறு கேரக்டரில் நடித்த நிலையில் அந்த படமே அவரது கடைசி படமாக அமைந்தது. நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என மூன்றிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றவர் தான் பிஆர் பந்தலு.

57 படங்கள் வரை பந்தலு தயாரித்து இயக்கி உள்ள நிலையில், என்பதும் பத்மினி பிக்சர்ஸ் என்ற பெயரில் இவர் தயாரித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவும் செய்தது.  பிஆர் பந்தலு கடந்த 1974 ஆம் ஆண்டு தனது 64வது வயதில் காலமானார். அவரது மகள்தான் பி. ஆர். விஜயலட்சுமி. இவர் தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். குறிப்பாக பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ’சின்ன வீடு’ பிரபு நடித்த ’அறுவடை நாள்’ போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.