கோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா…

நடிகர் தனுஷ் தற்போது நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டு பிஸியாக இருக்கிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51 வது படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது தவிர அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும், எச். வினோத் இயக்கத்தில் ஒரு படமும், ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல். ராய் உடன் ஒரு இந்தி படம் என அடுத்தடுத்து கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் தற்போது இரண்டு படங்களை இயக்கியும் வருகிறார். அதில் ஒன்று ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற பெயரில் உருவாகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். மேலும் மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் மற்றும் பிரியா வாரியர் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அடுத்ததாக சன் பிக்சசர்ஸ் தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ராயன்’. இப்படத்தில் கதையின் நாயகனாக அவரே நடிக்கிறார். அவருடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, வரலக்ஷ்மி சரத்குமார், சந்தீப் கிஷான், பிரகாஷ்ராஜ், பிக் பாஸ் சரவணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷின் மூத்த மகனான யாத்ரா கோலிவுட்டில் அறிமுகமாக போவதாக வந்த செய்தி தீயாய் பரவி கொண்டிருக்கிறது.

அதன்படி, யாத்ரா, நடிகர் தனுஷின் ‘ராயன்’ படம் மூலமாக சினிமா துறையில் அடியெடுத்து வைக்கிறார். அதுவும் நடிகராக அல்லாமல் ஒளிப்பதிவாளராக சினிமா துறையில் தன் பயணத்தை தொடங்குகிறார். நட்சத்திர குழந்தைகள் வழக்கமாக நடிகராக அறிமுகம் ஆவது போல் இல்லாமல், புதிய முயற்சியாக ஒளிப்பதிவு துறையை தேர்ந்தெடுத்திருப்பது அனைவரையும் ஆச்சர்ய பட வைத்தாலும், இவரின் திறமையை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

யாத்ராவின் முதல் படமே தனது தந்தையுடன் அமைந்திருப்பதால், நடிகர் தனுஷ்- யாத்ரா ஆகியோருடைய தந்தை – மகன் காம்போ எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...