முன்னணி நடிகர்களே இல்லாமல் பாக்யராஜ் செய்த மகத்தான சாதனை.. திரைக்கதையின் பிதாமகனாக ஜொலித்தது இப்படித்தான்!

இந்திய சினிமா உலகின் திரைக்கதை பிதாமகனாகத் திகழ்பவர் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ். நையாண்டியாகவே கதைகளைச் சொல்லி ஹிட் அடித்த இயக்குநர். இவரின் புகழை ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இவர் காலத்தில் பிறந்த பலருக்கு பாக்யராஜ் என்று தான் பெயரிடப்பட்டது.

இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் தன் குரு நாதர் பாரதிராஜா அவர்களிடம் தான் உதவி இயக்குனராக சேர்ந்த முதல் படத்திலேயே அவரின் நம்பிக்கையை பெற்றார். ஏனெனில் பாக்யராஜின் வசனங்கள்,பாரதிராஜா படத்திற்கு மிகுந்த வலு சேர்த்தது!

அதனால் தான் பாரதிராஜா தன்னுடைய சிஷ்யனுக்கு “புதிய வார்ப்புகள்”படம் மூலமாக நாயகனாக திரையுலகில் அறிமுகப்படுத்தினார். இந்த தைரியத்திற்கு அடிப்படை காரணம் பாக்யராஜ் அவர்கள் பாரதிராஜா அவர்களிடம் அளப்பறிய நம்பிக்கை பெற்றதுதான்!

பாக்யராஜை பொருத்தவரை அவர் தன் எழுத்தை,கதையைத்தான் அதிகமாக நேசித்தார். அதனால் அவர் தன் படங்களுக்கு தயாரிப்பாளரை தேடி போகாமல் தானே எளிய மனிதர்களை தயாரிப்பாளர்களாக உருவாக்கினார்.

ரீல் எல்ஐசி-க்கு செக் வைத்த ரியல் எல்ஐசி.. குழப்பத்தில் விக்னேஷ் சிவன்

தன் முதல் படத்தில் அப்போது மிகப்பிரபலமாக இருந்த இளையராஜாவிடம் போகாமல், அப்போது இசையில் வளர்ந்து கொண்டு இருந்த இயக்குனர் கங்கை அமரன் அவர்களை இசையமைக்க வைத்து “சுவரில்லா சித்திரங்கள்”படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி படமாக்கினார். இவர்கள் கூட்டணி”மௌன கீதங்கள்”படத்தில் கூட சொல்லி அடித்தது. இவர் படங்களை கூர்ந்து கவனித்தால் இவரின் படங்களின் தயாரிப்பாளரோ, நடிகையோ, இசையமைப்பாளரோ அந்த நேர மார்க்கெட்டில் உச்சத்தில் இருப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.

இருந்தாலும் தன்னுடைய அசாத்திய திரைக்கதை மூலம் படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கி விடுவார்.”முந்தானை முடிச்சு”படத்தில் கூட பாக்யராஜ் அவர்களின் ஆஸ்தான கங்கை அமரன்தான் இசையமைக்க இருந்தது. ஆனால் ஏவிஎம் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க இசையமைப்பாளர் ஆக பிறகு இளையராஜா ஆனார்.

தமிழில் ஒரு இயக்குனர் ஒரு படத்தை இயக்கி வெற்றிப்பெற்றால் அந்த படம் ரீமேக்காக தெலுங்கு,கன்னடம் என ஒரு சுத்து சுத்தி வரும். ஆனால் எவ்வளவோ மற்றவர்கள் வற்புறுத்தியும் மாற்று மொழியில் அவர் படத்தை இயக்க விரும்பவில்லை!

திரைக்கதையில் இவரது பாணியைப் பின்பற்றியே இன்ற இளம் இயக்குநர்கள் வளர்ந்து கொண்டு வருகிறார்கள். ஒரு பேட்டியில் கூட,”என்னத்தை ஒரே படத்த திரும்பி திரும்பி எடுத்துக்கிட்டு அந்த நேரத்துல இன்னொரு படத்தை உருவாக்கி விடுவேன்”என காரணத்தை சொல்லி இருப்பார். இவர் படங்களில் பிரமாண்டமோ,வெளிநாட்டு படப் பிடிப்போ இருக்காது ஆனால் எளிய மனிதர்களின் வாழ்வியலை அவர்களை உணர்வுகளை பார்வையாளனுக்கு கடத்தி அசாத்திய வெற்றி பெற்றவர்.

“ஏய்யா! எப்ப பார்த்தாலும் என் பெயரையே சொல்ல மாட்டேங்கிறே! எங்க டைரக்டர்!எங்க டைரக்டர் என சொல்லுற”என இவரின் குரு நாதர் பாரதிராஜா செல்லமாக கடிந்து கொண்ட போதும், இன்னமும் எங்க டைரக்டர் என சொல்லி உன்னதமான குரு பக்தியை காட்டுபவர் இயக்குநர் பாக்யராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...