நடிகர் அஜித்திற்கும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இருக்கும் இடையே இப்படி ஒரு போரா?

நடிகர் அஜித்குமார் ஹச் வினோத் இயக்கத்தில் வலிமை, துணிவு போன்ற திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். வருடத்திற்கு ஒரு படங்களில் மட்டுமே நடித்து வரும் அஜித், படங்களில் நடிப்பது மட்டுமின்றி உலக சுற்றுப்பயணம், பைக் டூர், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அதிக அதிக ஆர்வம் கொண்ட ஒரு சிறந்த நடிகர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

தற்பொழுது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அஜர்பை ஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி அன்று கூட விடுமுறை அல்லாமல் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்புகளில் நடிகை திரிஷா கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷாவும் மற்றொரு அஜித்திற்கு ஜோடியாக ஹியுமா குரோஷி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதன் பின் சில காரணங்களால் ஹியூமா குரேஷி மாற்றப்பட்டு தற்பொழுது ஹீரோயின் ரெஜினா ஒப்பந்தம் ஆகி உள்ளார். நடிகர் அஜித் மற்றும் ரெஜினா ஹீரோ ஹீரோயின் ஆக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான்.

மேலும், இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ், நடிகர் அர்ஜுன் மற்றும் பிரபல நடிகர் சஞ்சய் தத் என பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் விடாமுயற்சியின் படப்பிடிப்புகள் குறித்த மாஸ் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டம், ஆரவாரம், ஆடம்பரம் என எதையும் விரும்பாத ஹீரோ அஜித்திற்கும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இருக்கும் இடையே உள்ள இடைவெளி குறித்து சில ரகசிய அப்டேட் கிடைத்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தளபதி விஜய் நடிப்பில் கத்தி, துப்பாக்கி, சர்க்கார் போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களின் ஒருவராக பிரபலம் அடைந்தவர். அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்பார் திரைப்படத்தை இயக்கிய பெருமையும் ஏஆர் முருகதாஸிற்கு உண்டு. அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ் அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் அஜித் நடிப்பில் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். அந்த படத்தின் கதை அஜித்திடம் கூறப்பட்டு அதற்கு அஜித் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பின் படத்திற்காக தன் உடல் எடையை குறைக்க ஒப்புக்கொண்ட அஜித் விறுவிறுப்பாக அந்த படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார். மிரட்டல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்புகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

வெங்கட் பிரபுவின் அழைப்பிற்கு நோ சொன்ன விஜய்! அப்போ தளபதி 68 படத்தின் நிலைமை என்ன?

அதன் பின் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் நடிகர் அஜித்திற்கும் இடையே ஏற்பட்ட சில குழப்பத்தின் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன் பின் நடிகர் அஜித் இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து இந்த படத்தின் கதை நன்றாக உள்ளது. நாம் மற்ற ஒரு தயாரிப்பாளரின் உதவியுடன் இந்த படத்தை எடுக்கலாம் என விருப்பப்பட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், அதற்கு ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பாளருக்கு சாதகமாக பேசி இந்த படத்தின் கதையை படமாக்கும் முயற்சியை அப்படியே கைவிட்டு உள்ளார். அதன்பின் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் சூர்யாவை வைத்து கஜினி திரைப்படம் இயக்குவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதற்கிடையில் அஜித் அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அஜித்தால் இந்த துரோகத்தை மறைக்க முடிய வில்லை. மேலும் அஜித் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் மீண்டும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews