Categories: சமையல்

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா…. அப்போ இந்த சாலட் வாரம் 2 முறை சாப்பிடுங்க….

புரதம் நிறைந்த மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளே உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். பச்சை பயிரில் பொதுவாக நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைய உள்ளது , அதை முளைகட்ட விட்டு சாப்பிடும் போது சத்துக்கள் இரட்டிப்பாகிறது.

முளைகட்டிய பச்சை பயிறு சாலட்

தேவையான பொருட்கள்

பச்சைப் பயறு – 40 கிராம்

பூசணி – 20 கிராம்

கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

ஆலிவ் எண்ணெய் – 1/2 தேக்கரண்டி

கருப்பு உப்பு – 1 சிட்டிகை

எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை :

பச்சைப் பயரை முதலில் சுத்தம் செய்து 12 மணிநேரம் ஊற வைக்கவும். அதன் பின் தண்ணீரை நன்கு வடிகட்டி வெள்ளை துணியால் அதை முடி வைக்கவும்.

மறுநாள் காலை நமக்கு தேவையான முளைகட்டிய பச்சைப் பயறு தயார்.

பூசணிக்காயை நன்றாக நறுக்கி சமன் செய்து தனியே வைத்து அதனுடன் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் கலந்து ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சுவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்.

இப்போது முளைகட்டிய பச்சைப் பயறு சாலட் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

முட்டை சாப்பிட்டால் உடல் குறையுமா… உயர் புரதம் கொண்ட முட்டையின் எடை இழப்பு ரெசிபி இதோ!

இந்த சாலட் நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் மேலும் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

 

Published by
Velmurugan

Recent Posts